முதல் இரண்டு ரஜினி...இது மட்டும் கேஜிஎஃப் 2 ஸ்டைலில் இருக்கே...வாரிசை இப்படியா கலாய்ப்பது

சென்னை : விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆனாலும் இவைகள் சோஷியல் மீடியாவில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன.

விஜய் தற்போது தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் மாதம் துவங்கி நடந்து வருகிறது.

விஜய்யின் 66வது படமாக தயாராகி வரும் இந்த படத்தின் ஷுட்டிங், ஐதராபாத்தை தொடர்ந்து சென்னையில் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய்யின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று டைட்டிலுடன் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டது.

ஸ்டைலான லுக்கில் ஃபர்ஸ்ட் லுக்

ஸ்டைலான லுக்கில் ஃபர்ஸ்ட் லுக்

தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இந்த படத்திற்கு வாரிசு The Boss Returns என டைட்டில் வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய் செம ஸ்டைலாக கோட் ஷுட் அணிந்து அமர்ந்திருப்பது போன்ற ஸ்டில் இடம்பெற்றிருந்தது. இந்த ஃபர்ஸ்ட்லுக் லைக்குகளை அள்ளியது.

எல்லாமே காப்பி தானா

எல்லாமே காப்பி தானா

அதே சமயம் படத்தின் டைட்டில் ரஜினி பட டைட்டிலின் காப்பி, ஃபர்ஸ்ட்லுக் கபாலி படத்தின் ஃபர்ஸ்லுக் போன்று இருப்பதாக பலர் சோஷியல் மீடியாவில் கலாய்த்தனர். இதையும் தாண்டி பலர், இந்த போஸ்டரின் பேக்கிரவுண்ட் டிசைன் கண் ஆஸ்பத்திரி விளம்பரத்தில் வருவது. அதை தான் சுட்டு இதில் வைத்துள்ளனர் என்றனர்.

இது சந்திரமுகி ஸ்டில்ப்பா

இது சந்திரமுகி ஸ்டில்ப்பா

இதைத் தொடர்ந்து விஜய்யின் பிறந்தநாளான இன்று காலை செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதுவும் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தின் ரஜினியின் இன்ட்ரோ சீனில் வருவதை போல் விஜய்யும் மாட்டு வண்டியில் படுத்தபடி, குழந்தைகளுடன் வருவதாக அமைக்கப்பட்டிருந்தது. இதையும் நெட்டிசன்கள் கலாய்த்தனர்.

ரஜினி ஆக முயற்சி செய்கிறாரா

ரஜினி ஆக முயற்சி செய்கிறாரா

விஜய் ஏன் ரஜினி ஸ்டையிலை காப்பி அடிக்கிறார், ரஜினி போல் ஆக முயற்சி செய்கிறாரா விஜய் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். படத்தின் கதையும் பிரெஞ்ச் மொழி படத்தின் காப்பி என்று ப்ளூசட்டை மாறன் ட்விட் போட்டதால், அதே கதையில் இன்னும் எந்த படமெல்லாம் வந்திருக்கிறது என அலசி ஆராய்ந்து, வரிசையாக பட்டியலிட துவங்கி விட்டார்கள் நெட்டிசன்கள்.

முதலில் ரஜினி, இப்போ கேஜிஎஃப் 2 ஆ

முதலில் ரஜினி, இப்போ கேஜிஎஃப் 2 ஆ

இந்த சமயத்தில் இன்று மாலை வாரிசு படத்தின் மூன்றாவது லுக்கையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் மூன்றாவது லுக்கில் விஜய் பைக் மீது அமர்ந்திருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. இது கேஜிஎஃப் 2 படத்தில் வரும் சீனை போலவே அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி சுட்டிருக்கீங்களே

இப்படி சுட்டிருக்கீங்களே

முதல் இரண்டு போஸ்டர்கள் ரஜினி படங்களின் ஸ்டைலில் அமைக்கப்பட்டுள்ள வாரிசு போஸ்டர்கள், மூன்றாவது லுக்கில் பேக்கிரவுண்டில் புழுதி பறக்க விஜய் பைக் மீது விஜய் அமர்ந்திருக்கும் காட்சி, கேஜிஎஃப் 2 படத்தில் யாஷ் பைக் வரும் சீனை நினைவுபடுத்துகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், ஒரு போஸ்டரை கூட சொந்தமாக உருவாக்கவில்லையா...இப்படி அப்பட்டமாக சுட்டிருக்கீங்களே என கேட்டு வருகின்றனர்.

சமாதானம் சொல்லும் விஜய் ஃபேன்ஸ்

சமாதானம் சொல்லும் விஜய் ஃபேன்ஸ்

ட்ரோல்கள் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும், தெலுங்கு பட ஃபர்ஸ்ட்லுக் எல்லாம் அப்படி தான் இருக்கும். ஆனா படம் சூப்பர் ஹிட் ஆக்கி விடுவார்கள். முதல் இரண்டு போஸ்டர்களுடன் ஒப்பிடுகையில் இந்த போஸ்டர் பரவாயில்லை தான் என விஜய் ரசிகர்கள் தங்களை தாங்களே சமாதானம் செய்து கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X