நெட்டிசன்களிடம் சிக்கிய ரஞ்சிதமே ரஞ்சிதமே… வேற வழியே இல்லை… வாரிசு டீம் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை: விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வாரிசு படத்தின் முதல் பாடல் 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' நேற்று வெளியானது.

விஜய் பாடியுள்ள 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' பாடலை நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்துவருகின்றனர்.

ரஞ்சிதமே ரஞ்சிதமே

ரஞ்சிதமே ரஞ்சிதமே

விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் விஜய்யுடன் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் அதிகம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று மாலை வெளியானது. தமன் இசையில் விஜய் பாடியுள்ள 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' என்ற இந்தப் பாடல் Folk ஸ்டைலில் உருவாகியுள்ளது.

நெட்டிசன்கள் ட்ரோல்

நெட்டிசன்கள் ட்ரோல்

இந்நிலையில் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிளை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். விஜய் மட்டுமே ஸ்டைலிஷாக புது லுக்கில் இருக்கிறார், மற்றபடி பாட்டு மொத்தமும் காப்பி என கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர். தமனின் முந்தைய பாடல்களையும், புஷ்பவனம் குப்புசாமி பாடிய பாடலையும் மிக்ஸ் செய்துள்ளதாக ட்ரோல் செய்கின்றனர். மேலும், ஆல் தோட்ட பூபதி, மலையூர் மம்பட்டியான், சச்சின் படத்தில் வரும் வாடி வாடி சாங் என பல பாடல்களில் இருந்தும் காப்பியடிக்கப்பட்டுள்ளதாக கலாய்த்து வருகின்றனர்.

விரைவில் அடுத்த அதிரடி

விரைவில் அடுத்த அதிரடி

முதல்முறை விஜய்யுடன் கூட்டணி வைத்துள்ள தமன், தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்துவிட்டார் என்றும் ரசிகர்கள் குமுறி வருகின்றனர். அதேபோல், ஜானி மாஸ்டரின் கோரியோகிராப்பும் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்படுகிறது. அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்களில் வரும் அதே ஸ்டெப்பை, ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கும் கொடுத்துள்ளார் என கமெண்ட்ஸ் அடித்து கலாய்த்து வருகின்றனர். முதல் பாடல் இப்படி ட்ரோல் செய்யப்படுவதால், வாரிசு படக்குழு அதிரடி முடிவு எடுத்துள்ளதாம். அதன்படி, விரைவில் வாரிசு செகண்ட் சிங்கிளை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

விஜய்யுடன் இணைந்த அனிருத்

விஜய்யுடன் இணைந்த அனிருத்

வாரிசு படத்தின் இரண்டாவது பாடலையும் விரைவில் படக்குழு ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளதாகவும், இது விஜய்யின் இண்ட்ரோ சாங்காக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளதால், இரண்டாவது பாடல் ஆறுதலாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே, அஜித்தின் துணிவு படத்தின் முதல் பாடலும் விரைவில் வெளியாகவுள்ளதாம். இந்தப் பாடலையும் அனிருத் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X