செவ்வாய் கிரகத்துல ஐடி கம்பெனி கட்டித்தரேன்.. நாமக்கல்லில் நக்கல் பண்ண விஜய்.. இப்படி பொளக்குறாரே!
நாமக்கல்: #சனியின்_பயணம் என ஹாஷ்டேக் போட்டு அடிக்கும் அளவுக்கு விஜய்யின் சனிக்கிழமை பயணங்கள் எதிர்கட்சியை ஆட்டிப்படைத்து வருவதாக தளபதி விஜய் ரசிகர்கள் இன்னொரு பக்கம் டிரெண்ட் செய்து வருகின்றனர். மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இன்னமும் சரியாக கிடைக்கவில்லை. அதை நிறைவேற்றுவதே எங்களுடைய கட்சியின் கொள்கை, செயல் திட்டம் என ஏற்கனவே சொல்லிவிட்டேன், புதுசா எதையாவது சொல்லுங்க புதுசா எதையாவது சொல்லுங்கன்னு சொன்னா, செவ்வாய் கிரகத்துல ஐடி கம்பெனி கட்டித்தரேன்னு தான் சொல்லணும் என நாமக்கல்லில் நக்கலடித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
சனிக்கிழமை மட்டும் அரசியல் செய்பவன் அல்ல என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட மக்களை சந்தித்து வருவதாக உதயநிதி ஸ்டாலின் இதற்கு மேல் விஜய் விஷயத்தில் உம்முன்னு இருக்க முடியாது என மறைமுகமாக அட்டாக் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

ஆனால், விஜய் டைரக்ட்டாக அதிமுக கட்சி பாஜகவுடன் நேரடி கூட்டணி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திமுக அண்டர் கிரவுண்ட் டீலிங் செய்து மறைமுக கூட்டணியை வைத்திருக்கிறது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
நாமக்கல்லில் மெகா கூட்டம்: ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் தவெக தலைவர் விஜய் மக்களை சந்தித்து வருகிறார். ஒவ்வொரு வாரமும் மாநாடு நடத்தி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு மக்கள் கூட்டம் விஜய்யை காண அலைமோதுகிறது. பெரும்பாலும் படங்களில் மட்டுமே விஜய்யை பார்த்த மக்கள் தற்போது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வருகை தரும் நிலையில், எப்படியாவது அவரை பார்த்து விட வேண்டும் என முண்டியடித்துக் கொண்டு கூட்ட நெரிசலை கூட பொருட்படுத்தாமல் ஆண்கள், பெண்கள் என படையெடுத்து படையப்பா படத்தை வார வாரம் நேரிலேயே ரீக்ரியேட் செய்து வருகின்றனர்.
செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி: விஜய் திமுக கட்சியை எதிர்த்து மட்டுமே பேசுகிறார். அதிமுக பற்றி பேசவில்லை என்பதற்கும் இன்று பதிலடி கொடுத்துவிட்டார். அம்மா அம்மான்னு ஜெயலலிதாவை அழைத்தவர்கள் இன்று மோடி கட்சியில் கூட்டணி. திமுகவும் மறைமுக கூட்டணி தான் என்று பேசியுள்ளார். மேலும், புதுசா எதையாவது சொல்லுங்கண்ணு கேட்கிறவங்களுக்காக ஒண்ணு சொல்றேன். செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்றோம், இந்தியாவுல இருந்து அமெரிக்காவுக்கு ரோடு போடுறோம், வீட்டுக்குள்ளேயே ஏரோபிளேன் விடுறோம் இப்படி எதையாவது சொல்லலாமா? என நக்கல் அடித்து விட்டு, மக்களுக்குத் தேவையான அடிப்படையே இத்தனை ஆண்டுகளாக ஆண்டு வரும் கட்சிகள் சரிசெய்யவில்லை. அதை கண்டிப்பாக செய்வதை தவெக உறுதியுடன் எந்தவொரு சமரசமும் இன்றி செய்யும் என்று பேசினார்.


Click it and Unblock the Notifications











