நான் மிஸ் பண்ண படத்தில் விஜய் சேதுபதி நடித்தார்... நடிகர் பரணி பகிர்ந்த தகவல்!

சென்னை : விஜய் சேதுபதி இப்பொழுது இந்திய திரையுலகில் மிகப் பிரபலமான நடிகராக உருவாக்கியுள்ளார்

கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து விஜய் சேதுபதி நடித்து வருவதால் தனித்துவமான நடிகர்களாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார்

இதனிடையில் நடிகர் பரணி நான் மிஸ் பண்ண படத்தில் விஜய்சேதுபதி நடித்தார் என தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

வில்லனாக நடித்து

வில்லனாக நடித்து

நடிகர் விஜய் சேதுபதிக்கு தமிழைத் தொடர்ந்து மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஹீரோவாக நடிக்கும் அதேசமயம் வில்லன் கதாபாத்திரத்திலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் விஜய் சேதுபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பியிருப்பார்.

வசூலை அள்ளியது

வசூலை அள்ளியது

விஜய்க்கு வில்லனாக பவானி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் பிடித்த விஜய் சேதுபதிக்கு தெலுங்கிலும் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்கிறது. அந்த வகையில் உப்பண்ணா என்ற படத்தில் வில்லன் கலந்த அப்பா ரோலில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நெகட்டிவ் ரோலில் நடித்து முற்றிலும் புதுமுக நடிகர்கள் நடித்திருந்தபோதும் மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது உப்பண்ணா . அதேபோல மலையாளத்திலும் சில படங்களில் நடித்து உள்ளார்

இந்தி வெப்தொடரில்

இந்தி வெப்தொடரில்

இப்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் இந்திய அளவில் மிகப் பெரிய கவனத்தைப் பெற்று வரும் அதனால் இந்தி படங்களிலும் இப்போது நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகி தமிழில் சூப்பர் டூப்பர் வெற்றிபெற்ற மாநகரம் இந்தி ரீமேக் மும்பை கார் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். தி ஃபேமிலி மேன் என்ற வெப் சீரிஸை இயக்கிய டீகே மற்றும் ராஜ் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த வெப்தொடரில் ஷாகித் கபூர், ராஷி கண்ணா, விஜய் சேதுபதி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. மேலும் காந்தி டாக்ஸ் மற்றும் மேரி கிறிஸ்மஸ் உள்ளிட்ட படங்களிலும் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

நான் மிஸ் பண்ண படத்தில் விஜய் சேதுபதி நடித்தார்

நான் மிஸ் பண்ண படத்தில் விஜய் சேதுபதி நடித்தார்

தமிழில் மாமனிதன், விடுதலை, விக்ரம் என மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி யுள்ள அடுத்தடுத்த படங்கள் விஜய் சேதுபதிக்கு வெளியாக உள்ள நிலையில் நடிகர் பரணி நான் மிஸ் பண்ணப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்தார். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து அறிமுகமான தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்க இருந்தாராம் , அதேபோல மைனா படத்திலும் பரணி தான் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தாராம். கால்ஷீட் பிரச்சனை காரணமாக இவ்விரு படங்களிலும் நடிக்க முடியாமல் போனது இந்த சுவாரஸ்ய தகவலை தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் நடிகர் பரணி பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X