விஜய் சேதுபதி படங்களில் இதுதான் அதிகம்... 400 தியேட்டர்களில் வெளியாகும் 'ONNPS'!

By Vignesh Selvaraj

Recommended Video

400 தியேட்டர்களில் வெளியாகும் 'ONNPS'!

சென்னை : விஜய் சேதுபதி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளிவர இருக்கும் படம் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்'.

விஜய் சேதுபதியுடன் கௌதம் கார்த்திக், நிஹாரிகா, காயத்ரி, விஜி சந்திரசேகர், ரமேஷ் திலக் உள்பட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் விஜய் சேதுபதி 10-க்கும் மேற்பட்ட கெட்டப்களில் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தமிழகம் முழுக்க 400-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகிறது.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

விஜய் சேதுபதியுடன் கௌதம் கார்த்திக், நிஹாரிகா, காயத்ரி உள்பட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். ஆறுமுக குமார் இப்படத்தை இயக்கி உள்ளார். ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பத்து கெட்டப்புக்கு மேல்

பத்து கெட்டப்புக்கு மேல்

விஜய் சேதுபதி பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்களில் நடித்திருப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தப் படத்தில், 'எமன்' என்ற கேரக்டரில் பழங்குடி மக்களின் தலைவனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

400 தியேட்டர்களுக்கு மேல்

400 தியேட்டர்களுக்கு மேல்

விஜய் சேதுபதி படங்களிலேயே இதுதான் அதிக விலைக்கு விற்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. முதன்முறையாக விஜய் சேதுபதி படம் இன்று (பிப்ரவரி 2-ம் தேதி) தமிழ் நாட்டில் மட்டும் 400 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்படுகிறது.

விநியோகஸ்தர் நம்பிக்கை

விநியோகஸ்தர் நம்பிக்கை

இதுகுறித்து படத்தை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர் ஒருவர், "விஜய்சேதுபதி - கெளதம் கார்த்திக்கின் இந்த புதிய கூட்டணி எல்லா தரப்பு ரசிகர்களாலும் வரவேற்கப்படும். படத்தை 400 தியேட்டர்களுக்கு மேல் திரையிட ஏற்பாடு செய்திருக்கிறோம்" எனக் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X