விஜய் சேதுபதிக்கு 3 மனைவிகளா... இது தான் லேட்டஸ்ட் அப்டேட்டா ?
சென்னை : டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் ஷுட்டிங் காரைக்கடியில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. படத்தின் பெரும்பாலான பகுதிகளை முதல்கட்ட ஷுட்டிங்கிலேயே எடுத்து முடித்து விட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த படத்தில் கமலுக்கு 5 வில்லன்கள் எனவும் முக்கிய வில்லன்களாக விஜய் சேதுபதியும், ஃபகத் ஃபாசிலும் நடிக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது தான் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டி உள்ளது. முதல் முறையாக இணையும் இந்த கூட்டணி எப்படி இருக்கும் என பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் முதன்மை வில்லன் விஜய் சேதுபதி தான் என ஏற்கனவே கூறி விட்டனர். தற்போது அவரது கேரக்டர் பற்றிய சில தகவல்களை விக்ரம் படக்குழு வெளியிட்டுள்ளது. கதைப்படி விஜய் சேதுபதிக்கு 2 மனைவிகள், ஒரு காதலி உள்ளதாம்.

இந்த 3 கேரக்டர்களில் நடிக்க போகிறவர்கள் சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளாம். விஜய் சேதுபதியின் மனைவிகளாக விஜே மகேஸ்வரியும், நடிகை மைனா நந்தினியுமாம். காதலியாக நடிப்பது வேறு யாருமில்லை பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் தானாம்.
ஆனால் விஜய் சேதுபதியின் கேரக்டர் பற்றிய இந்த தகவல் உண்மை தானா அல்லது வேறு ஏதாவது சர்ப்ரைஸ் ட்விஸ்ட் வைத்துள்ளாரா டைரக்டர் லோகேஷ் கனகராஜ் என தெரியவில்லை. ஆனால் விஜய் சேதுபதியின் ரோல் பற்றிய இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
முதலில் கமலின் மகனான காளீதாஸ் ஜெயராம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தான் ஷிவானி நடிக்க போகிறார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வில்லனான விஜய் சேதுபதிக்கு ஜோடி என தகவல் வெளியாகி உள்ளது. இதில் எது உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
விக்ரம் படத்தில் ஆண்டிரியாவும் முக்கிய ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மீதமுள்ள 3 வில்லன்கள் யார் என்பதும் இதுவரை உறுதியாக சொல்லப்படவில்லை. சமீபத்தில் தான் படப்பிடிப்பில் நரேன் கலந்து கொண்டார். மூன்றாவது வில்லன் ரோலில் அவர் தான் நடிப்பதாக பல நாட்களாக சொல்லப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











