மும்பையில் முகாமிட்ட விஜய் சேதுபதி...எதுக்குன்னு தெரியுமா

மும்பை : கோலிவுட்டில் கேட்டாலே தலை சுற்ற வைக்கும் அளவிற்கு பிஸியாக இருக்கும் நடிகர் யார் எனக் கேட்டால் அது நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான். அந்த அளவிற்கு தினம் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் தனது நடிப்பு திறமையைக் காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் விஜய் சேதுபதி. ஏற்கனவே அவர் நடித்த லாபம் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. கைவசம் 12 படங்கள் வரை வைத்திருக்கிறார்.

இதற்கிடையில் தமிழில் சன் டிவி.,யில் ஒளிபரப்பாக உள்ள மாஸ்டர் செஃப் என்ற சர்வதேச சமையல் நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்க உள்ளார் விஜய் சேதுபதி. இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 7 ம் தேதி முதல் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை தெலுங்கில் ஜெமினி டிவி.,யில் தமன்னா தொகுத்து வழங்க உள்ளார். முன்பே துவங்கப்பட்டிருக்க வேண்டிய இந்த நிகழ்ச்சி, கொரோனா காரணமாக தாமதமாக துவங்கப்பட உள்ளது.

 வெப் சீரிசில் நடிக்கும் விஜய் சேதுபதி

வெப் சீரிசில் நடிக்கும் விஜய் சேதுபதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் உள்ளிட்ட பெரிய படங்கள் பலவற்றில் வில்லன் ரோலிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் மெகா ப்ராஜக்டாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் விஜய் சேதுபதி. இதற்காக அவர் தற்போது மும்பை சென்றுள்ளார்.

இனியும் காத்திருக்க முடியாது

இனியும் காத்திருக்க முடியாது

ராஜ் இந்த வெப் சீரிசை இயக்க உள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் ஷாகித் கபூர், ராஷி கன்னா போன்றோர் நடிக்க உள்ளனர். இது பற்றி இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டுள்ள ஷாகித் கபூர், இதில் நடிக்க எப்போது ராஜ் அழைப்பார் என காத்திருக்கிறேன். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க இனியும் காத்திருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது முறையாக இணைகிறேன்

மூன்றாவது முறையாக இணைகிறேன்

விஜய் சேதுபதியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை ராஷி கன்னாவும் பதிவிட்டுள்ளார். அத்துடன், எனக்கு மிகவும் பிடித்த நடிகர், நல்ல மனிதருடன் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்க உள்ளேன். இந்த முறை இந்தியில். எங்கள் செட்டிற்கு உங்களை வரவேற்கிறோம் சார் என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்ப்பை கிளப்பிய வெப்சீரிஸ்

எதிர்பார்ப்பை கிளப்பிய வெப்சீரிஸ்

விஜய் சேதுபதி தமிழில் நடித்த சங்க தமிழன் படத்தில் ராஷி கன்னா நடித்துள்ளார். அடுத்ததாக விஜய் சேதுபதி நடித்து ரிலீசாக உள்ள துக்ளக் தர்பார் படத்தின் விஜய் சேதுபதியுடன் ராஷி இணைந்து நடித்துள்ளார். இவர்களின் இந்த பதிவுகளால் இந்த வெப் சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்க துவங்கி விட்டது. இதன் ஷுட்டிங் சமீபத்தில் துவங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

ஷாகித் கபூரின் பதிவை அவரது ரசிகர்கள் மட்டுமல்ல விஜய் சேதுபதியின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த பதிவை இதுவரை சுமார் ஒரு லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் மற்றும் விக்ரம் படத்தில் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளாராம் விஜய் சேதுபதி.

Recommended Video

'Vijay Sethupathi-க்கும் Sivakarthikeyan-க்கும் ஒரே ஒரு வித்தியாசம் | Anandraj Interview
மல்டி ஹீரோக்கள் படத்தில் விஜய் சேதுபதி

மல்டி ஹீரோக்கள் படத்தில் விஜய் சேதுபதி

அத்துடன் ஆதி, சன்தீப் கிஷன் நடிக்கும் ராணுவத்தை பின்புலமாகக் கொண்ட ஒரு படத்திலும் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் உள்ளிட்ட பல மல்டி ஹீரோ படங்களில் நடிக்கவும் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X