»   »  'அதுக்குள்ள பெரியப்பா படத்தில் நடிக்கப்போறேன்' - விஜய் சேதுபதி ஹீரோயின் ஹேப்பி!

'அதுக்குள்ள பெரியப்பா படத்தில் நடிக்கப்போறேன்' - விஜய் சேதுபதி ஹீரோயின் ஹேப்பி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஜய் சேதுபதி ஹீரோயின் டோலிவுட்டில் ஹேப்பி!

ஐதராபாத் : விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் காயத்ரியோடு இன்னொரு ஹீரோயினாக நடித்தவர் நிஹாரிகா கொனிடேலா. இவர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகள்.

தெலுங்கில் 'ஒக்க மனசு', 'நல்ல கோச்சி' உள்பட சில படங்களில் நடித்தவர் நிகாரிகா. தமிழில், விஜய் சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் நாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் வாய்ப்பு வரவில்லை.

Vijay sethupathi heroine in Chiranjeevis film

தற்போது தெலுங்கில் 'ஹேப்பி வெட்டிங்' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, சுதீப், அமிதாப் பச்சன், நயன்தாரா ஆகியோர் நடித்து வரும் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் நிகாரிகா.

நிஹாரிகா "சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறேன். இந்தப் படம் என்னை முன்னணி நடிகையாக்கும் என நம்பிக்கை இருக்கிறது. அதோடு, சினிமாவில் நுழைந்து சில ஆண்டுகளிலேயே சிரஞ்சீவி படத்தில் வாய்ப்பு கிடைத்திருப்பதை பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.

சில படங்களில் நடித்திருக்கும் நிலையிலேயே தனது பெரியப்பா சிரஞ்சீவியின் படத்தில் நடிக்க இருப்பதால் குஷியாகி இருக்கிறார் நிஹாரிகா. சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து பிரபலமாகிவரும் இன்னொரு நடிகையை ரசிகர்களும் வரவேற்று வருகிறார்கள்.

English summary
Actress Niharika konidela (niece of Chiranjeevi) committed to act in Chiranjeevi's 'Sye raa narasimha reddy' movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X