»   »  கககபோ.... விஜய் சேதுபதி படத்துக்கு வந்த சிக்கல்!

கககபோ.... விஜய் சேதுபதி படத்துக்கு வந்த சிக்கல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூது கவ்வும் நலன் குமாரசாமி, மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து உருவாக்கி வரும் காதலும் கடந்து போகும் படம் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டரில் ‘க க க போ' விரைவில் என்று விளம்பரப்படுத்தியிருந்தனர். இதற்கு புதுமுக இயக்குனர் விஜய் கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்.


Vijay Sethupathi movie title in trouble

'கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்க போறாங்க' என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்த விஜய். இந்த படத்துக்கு 'க க க போ' என்று சுருக்கி தலைப்பிட்டு இருக்கிறார்.


இது குறித்து இயக்குநர் விஜய் கூறும்போது, "பெரும் வரவேற்பு பெற்ற வடிவேலுவின் வசனம் தான் 'க க க போ'.


எங்கள் படத்துக்கு சிறப்பு தலைப்பாக இருக்கும் என்று அதையே வைத்தோம். ஆனால் இப்போது நலன் தனது படத்துக்கும் இதே தலைப்பு வைத்திருப்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நாங்கள் முதலிலேயே இந்த தலைப்பை சூட்டிவிட்டோம். இது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது," என்று தெரிவித்திருக்கிறார்.


மேலும், தனது படத்தின் தலைப்புக்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் 'காதலும் கடந்து போகும்' விளம்பரப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.


காதலும் கடந்து போகும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

English summary
Debutant director Vijay has objected Vijay Sethupathi movie title Kakakapo and claimed it was registered by him earlier.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil