நான் தாடி மீசை வச்ச குழந்தையப்பா.. குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விஜய்சேதுபதி.. வைரலாகும் வீடியோ!
சென்னை: குழந்தை ஒன்றுடன் நடிகர் விஜய்சேதுபதி கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நெப்போடிசம் எல்லாம் அந்தளவுக்கு தலைவிரித்து ஆடவில்லை என்பதற்கு ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் உள்ளன.
நடிகர் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனும் நிகழ்கால எடுத்துக்காட்டுகளாக வலம் வருகின்றனர்.

கஷ்டப்பட்டு
கஷ்டப்பட்டு உழைத்தால், அதற்கான நேரம் வரும் வரை கொக்கு போல காத்திருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிகழ்த்தி காட்டியவர் நடிகர் விஜய்சேதுபதி. துணை நடிகனாக இருந்து, தனது விடா முயற்சியால் ஹீரோவான அவர், தற்போது சொந்தமாக படத்தையே தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார் தமிழ் சினிமாவில்.

அன்பு உள்ளம்
மக்கள் செல்வன் என மக்கள் அவரை செல்லமாக அழைக்க அவரது அன்பு உள்ளம் தான் காரணம். கொரோனா காலத்திலும், ரசிகர்களை வாரி அணைத்து முத்தம் கொடுக்கக் கூடிய பாசமலர். யாரையும் சாமனியனாக பார்க்கக் கூடாது சக மனிதனாக பார்க்க வேண்டும் என்பதை பலமுறை சொல்லாலும், செயலாலும் அறிவுறுத்து வருகிறார்.
தாடி மீசை வைத்த குழந்தை
சமீபத்தில் ரசிகர் ஒருவரின் குழந்தை உடன் நடிகர் விஜய்சேதுபதி கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. வெள்ளை தாடியும் மீசையுமாக தோற்றமளிக்கும் விஜய்சேதுபதி, குழந்தையாகவே மாறி அந்த குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மச்சக்காரன்டா நீ
மேலும், அந்த குழந்தையை பார்த்து மச்சக்காரண்டா நீ நல்லா வருவ என சொல்ல, அந்த குழந்தையை வைத்திருக்கும் நபர், உங்க அளவுக்கு எல்லாம் கஷ்டப்பட்டு உழைக்க முடியுமான்னா எனக் கேட்க, அவர் சிரித்துக் கொண்டே தட்டிக் கொடுக்கும் காட்சி சமூக வலைதளத்தில் தீயாக பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











