Don't Miss!
- Finance
2 நாளில் ரூ.18,000 கோடியை இழந்த LIC.. எல்லாம் அதானி குழுமத்தால் வந்த பிரச்சனை!
- News
சட்டைல தேசியக்கொடியைக் குத்திட்டு வரச் சொன்னா.. நீங்க என்ன ‘கொடி’ படத்தை குத்திட்டு வந்திருக்கீங்க
- Lifestyle
வாஸ்துப்படி வீட்டின் எந்த திசையில் குப்பை தொட்டியை வைக்க வேண்டும் தெரியுமா?
- Sports
இந்திய அணியில் உள்ள பெரிய வீக்னஸ்.. அதிக இழப்பை தரலாம்.. ரோகித்திற்கு இர்ஃபான் பதான் எச்சரிக்கை
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Automobiles
டாடாவோட கதையை முடிக்க பிளான்.. ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
யாரு சாமி நீங்களாம்.. சண்டைக் காட்சியில் டீ சாப்பிட்டு சாவகாசமாக ஒரு ஃபைட்.. விஜய்சேதுபதியுமா?
சென்னை: இந்த ஆண்டு மாமனிதன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருதை வென்றுள்ள விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான டிஎஸ்பி படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியை பார்த்து ரசிகர்கள் அப்படியே ஷாக் ஆகிவிட்டனர்.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்கள் வெற்றி அடைந்தன.
அப்படியே விஜய்சேதுபதியிடமும் ஒரு கால்ஷீட் வாங்கிவிட்ட பொன்ராம் எடுத்த டிஎஸ்பி திரைப்படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சி தான் தற்போது சோஷியல் மீடியா ட்ரோல் மெட்டீரியலே!
2
லட்சம்
செலவு
பண்ணி
பிக்பாஸ்
வீட்டில்
தூங்க
வந்த
மாமனிதன்..
ராம்
ராமசாமியை
விளாசும்
ரசிகர்கள்!

ஹீரோவும் நானே வில்லனும் நானே
இந்த ஆண்டு காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன், டிஎஸ்பி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து அசத்திய விஜய்சேதுபதி. கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சந்தனம் கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டி எடுத்து இருந்தார். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டும் சிறந்த வில்லன் விஜய்சேதுபதி தான் என பல மீடியாக்களும் டாப் 10 பட்டியலில் விஜய்சேதுபதியின் பெயரை அறிவித்து வருகின்றன.

சிறந்த நடிகர்
அதே போல சீனு ராமசாமியின் மாமனிதன் படத்தில் மிகவும் யதார்த்தமாக நடித்த விஜய்சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருதினை சென்னை சர்வதேச திரைப்பட விருது விழாவில் வழங்கி உள்ளனர். கடந்த ஆண்டு விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான படங்கள் சொதப்பிய நிலையில், வெகுவாக ட்ரோல் செய்யப்பட்டதை போல இந்த ஆண்டும் விஜய்சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான டிஎஸ்பி திரைப்படம் ட்ரோல் மெட்டீரியலாக மாறி உள்ளது.

கிளைமேக்ஸ் காட்சி
இந்த மாதிரி அற்புதமான கிளைமாக்ஸ் சண்டை காட்சி வைக்க போன ஜென்மத்திலும் டைரக்டரா இருந்தால் மட்டுமே முடியும்.. ஒருவேளை சண்டைபயிற்சி டீக்கடையா இருக்குமோ? என நெட்டிசன்கள் விஜய்சேதுபதியின் டிஎஸ்பி படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியை மரண ட்ரோல் செய்து வருகின்றனர்.
|
டீ சாப்பிட்டு சாவகாசமா
கலகலப்பு படத்தில் வரும் சந்தானம் காமெடியில் சாப்பிட்டுட்டு சாவகாசமாக சாய்ங்காலம் தேடலாமா என்கிற வசனத்தை அப்படியே காட்சியாகவே இயக்குநர் பொன்ராம் இந்த படத்தில் வைத்துள்ளார். விஜய்சேதுபதிக்கும் வில்லனுக்கும் இடையே கடுமையான சண்டைக் காட்சி நடந்து கொண்டிருக்கும் போது, எந்த பயமும் இல்லாமல் டீ எடுத்துக் கொண்டு ஒருத்தர் வர, வில்லன் டீ சாப்பிட்டுக் கொண்டு சண்டை போடலாமா என கேட்க விஜய்சேதுபதியும் ரொம்ப கூலாக ஓகே சொல்ல இருவரும் டீ குடித்து விட்டு சண்டை போடுகின்றனர்.

ரசிகர்கள் கலாய்
இப்படியொரு கிளைமேக்ஸ் வைத்தால் அப்புறம் எப்படி இந்த படம் ஓடும். அதனால் தான் சன் பிக்சர்ஸ் நைசாக கடைசி நேரத்தில் கார்த்திக் சுப்புராஜ் தலையில் இந்த படத்தை கட்டி விட்டார்களா? என ரசிகர்கள் வெரைட்டி வெரைட்டியாக இந்த காட்சியை பார்த்து சோஷியல் மீடியாவில் கலாய்த்து வருகின்றனர்.