விஜய் சேதுபதி படத்துக்கு வந்த சிக்கல்… கிறிஸ்துமஸ் ரிலீஸில் இருந்து கோடை விடுமுறைக்கு போனது ஏன்?

மும்பை: தமிழில் முன்னணி நடிகராக கலக்கி வரும் விஜய் சேதுபதி இந்தியில் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதியுடன் கத்ரினா கைஃப் நடித்துள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் வரும் டிசம்பர் மாதம் 23ம் தேதி வெளியாகவிருந்தது.

இந்நிலையில், திடீரென மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

பாலிவுட்டில் விஜய் சேதுபதி

பாலிவுட்டில் விஜய் சேதுபதி

ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது கேரியரை தொடர்ந்த விஜய் சேதுபதி, இன்று வெரைட்டியான நடிகராக அசத்தி வருகிறார். ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என எது கொடுத்தாலும் விஜய் சேதுபதியின் நடிப்பு ரசிகர்களை அசர வைக்கிறது. தமிழில் பிஸியாக இருந்தாலும் தெலுங்கிலும் தடம் பதித்த விஜய் சேதுபதி, இப்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் கத்ரினா கைஃபுடன் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார்.

ரிலீஸ் தேதியில் மாற்றம்

ரிலீஸ் தேதியில் மாற்றம்

2018ல் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் இந்தியில் வெளியான 'அந்தாதூன்' திரைப்படம் சூப்பர் ஹிட அடித்தது. மேலும், இந்தப் படம் 3 தேசிய விருதுகளையும் வென்றது. இதனை அடுட்து இந்தியில் விஜய் சேதுபதி நடிக்கும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்'படத்தை இயக்கியுள்ளார்.. விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் ஆகியோருடன் ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சைக்கோ திரில்லர் ஜானரில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள மெர்ரி கிறிஸ்துமஸ், டிசம்பர் 23ம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், தற்போது அதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாம்.

கோடை விடுமுறையில் ரிலீஸ்

கோடை விடுமுறையில் ரிலீஸ்

கிறிஸ்துமஸை முன்னிட்டு டைகர் ஷெராப் நடித்துள்ள 'கண்பத்', ரன்வீர் சிங் நடித்துள்ள 'சர்கஸ்' ஆகிய படங்கள் டிசம்பரில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், போட்டியை சமாளிப்பதற்காக மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தை அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். மேலும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. விஜய் சேதுபதியின் முதல் இந்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

ஜவானில் வில்லன்

ஜவானில் வில்லன்

இன்னொரு பக்கம் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் கமிட் ஆகியுள்ளார் விஜய் சேதுபதி. அட்லீ இயக்கும் இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு ஆகியோரும் நடித்து வருகின்றனர். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும், விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாகவும் மிரட்டிய விஜய் சேதுபதி, இப்போது பாலிவுட் பாட்ஷாவுக்கும் வில்லனாக நடிப்பது, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் ஜவான் படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் போஸ்டர் வெளியாகலாம் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X