யாத்தே… “காத்துவாக்குல ரெண்டு காதல்“ மொத்த வசூல் இவ்வளவா ?... வாய்பிளந்த ரசிகர்கள் !
சென்னை : காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கண்மணி என்கிற கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா என்கிற கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர்.
ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவை என முக்கோண காதல் கதை கொண்ட இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

காத்துவாக்குல இரண்டு காதல்
காதல் கதையம்சம் கொண்ட கதைகளை வித்தியாசமாக கையாள்வதில் பெயர் போன விக்னேஷ் சிவன் இயக்கத்தில், முக்கோண காதல் கதையாக உருவாகி உள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். நானும் ரவுடிதான் வெற்றிக்கு பிறகு விக்னேஷ் விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.

எல்லாம் நேருக்கு மாறாக
கதையின் கதாநாயகன் விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் எல்லாம் நேருக்கு மாறாக நடக்கிறது. பகலில் கார் டிரைவராகவும் இரவில் பவுன்சராகவும் வேலை பார்த்து வருகிறார் விஜய்சேதுபதி. டிரைவராக வேலை பார்க்கும்போது நயன்தாராவையும் பவுன்சராக வேலை பார்க்கும்போது சமந்தாவையும் காதலிக்கிறார்.

ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு
ஒரு கட்டத்தில் இந்த காதல் பிரச்சனையாக மாறுகிறது. அந்த பிரச்சனையை விஜய்சேதுபதி எப்படி சமாளித்தார்? யாருடன் காதலில் ஒன்று சேர்ந்தார் என்பதே படத்தின் கதை. ராம்போ கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி வழக்கமான நடிப்பை கொடுத்துள்ளார். ரொமான்ஸ் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்துள்ளார்.

மகத்தான வசூல்
அனிருத்தின் பின்னணி இசையில் டூ டூ பாடல், நான் பிழை, டிப்பம் டப்பம் பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. ஏப்ரல் 28ந் தேதி வெளியான இப்படம் தற்போது வசூலில் கலக்கி வருகிறது. இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ. 23 கோடி வசூலாகி உள்ளது என்றும், உலகம் முழுவதும் 34.2 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











