»   »  7ம் தேதி சத்யம் சினிமாஸ் வரலாற்றில் புதிய சாதனை படைக்கும் விஜய் சேதுபதி: என்ன தெரியுமா?

7ம் தேதி சத்யம் சினிமாஸ் வரலாற்றில் புதிய சாதனை படைக்கும் விஜய் சேதுபதி: என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சத்யம் சினிமாஸ் தியேட்டர் வரலாற்றில் விஜய் சேதுபதி புதிய சாதனை படைக்க உள்ளார்.

கோலிவுட் ஹீரோக்கள் ஒரு ஹிட் கொடுக்க கஷ்டப்படும்போது விஜய் சேதுபதி என்னவென்றால் அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வருகிறார். இந்த ஆண்டு மட்டும் அவரது நடிப்பில் சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை என 5 படங்கள் ரிலீஸாகியுள்ளன.


அந்த 5 படங்களுமே ஹிட்டாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தர்மதுரை

தர்மதுரை

விஜய் சேதுபதி, தமன்னா நடித்த தர்மதுரை படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி வெளியானது. அதன் பிறகு அவரின் ஆண்டவன் கட்டளை படம் செப்டம்பர் 23ம் தேதி திரைக்கு வந்தது. இந்நிலையில் வரும் 7ம் தேதி விஜய் சேதுபதியின் றெக்க படம் ரிலீஸாக உள்ளது.
சத்யம் சினிமாஸ்

சத்யம் சினிமாஸ்

சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸ் தியேட்டரில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
றெக்க

றெக்க

சத்யம் சினிமாஸில் ஏற்கனவே விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள் ஓடிக் கொண்டிருக்கும்போது வரும் வெள்ளிக்கிழமை றெக்க படம் ரிலீஸாகிறது. அப்படி என்றால் சத்யம் சினிமாஸில் ஒரே சமயத்தில் விஜய் சேதுபதியின் 3 படங்கள் ஓடும்.
விஜய் சேதுபதி சாதனை

விஜய் சேதுபதி சாதனை

சத்யம் சினிமாஸ் வரலாற்றில் ஒரே நடிகர் நடித்த மூன்று படங்கள் அதுவும் ஒரே சமயத்தில் திரையிடப்படுவது இது தான் முதல் முறை ஆகும். இதன் மூலம் சத்யம் சினிமாஸ் வரலாற்றில் விஜய் சேதுபதி புதிய சாதனை படைக்க உள்ளார்.


English summary
Actor Vijay Sethupathi is all set to make a new record in Chennai Satyam Cinemas on friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil