காத்து வாக்கல ரெண்டு காதல் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட விஜய் சேதுபதி
சென்னை : இந்திய அளவில் பிஸியான நடிகராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடிக்க கமிட்டாக உள்ளார். இவர் நடித்த பல படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கோண காதல் கதையை அடிப்படையாக கொண்டது தான் இந்த படம்.

டப்பிங்கை முடித்த நயன்தாரா
ரொமான்டிக், காமெடி படமான இதன் டப்பிங் வேலைகளை நயன்தாரா துவக்கி விட்டதாக விக்னேஷ் சிவன் சமீபத்தில் ஃபோட்டோவுடன் அப்டேட் வெளியிட்டிருந்தார். தான் எழுதிய டயலாக்கை காதலி நயன்தாரா பேசுவது சந்தோஷமாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

அப்டேட் தந்த விஜய் சேதுபதி
தற்போது ஹீரோவான விஜய் சேதுபதி, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்காக டப்பிங் பேசி வரும் சூப்பர் அப்டேட்டை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் பிரபலங்கள் தங்கள் பகுதி டப்பிங் பேசும் அப்டேட்டை பகிர்ந்து வருவதை ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

வைரலாக்கிய ரசிகர்கள்
நயன்தாராவை தொடர்ந்து சமீபத்தில் தான் இளைய திலகம் பிரபு டப்பிங் பேசி முடித்தார். இவர்களைத் தொடர்ந்து ஸ்டூடியோவில் டப்பிங் பேசுவதை இரண்டு ஃபோட்டோக்களுடன் பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த ஃபோட்டோக்களை அவரின் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

எப்போ ரிலீஸ் தெரியுமா
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் முதல் முறையாக நயன்தாராவும், சமந்தாவும் இணைந்து நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தின ஸ்பெஷலாக இந்த படம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











