»   »  நயன்தாராவைத் தொடர்ந்து தமன்னாவுடன் ரொமான்ஸ்...விஜய் சேதுபதியின் அதிர்ஷ்டமிது

நயன்தாராவைத் தொடர்ந்து தமன்னாவுடன் ரொமான்ஸ்...விஜய் சேதுபதியின் அதிர்ஷ்டமிது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாராவைத் தொடர்ந்து அடுத்ததாக தமன்னாவுடன் ரொமான்ஸ் பண்ணப் போகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

நானும் ரவுடிதான் படத்தைத் தொடர்ந்து மீண்டும் வெற்றி நாயகனாக மாறியிருக்கிறார் விஜய் சேதுபதி. தற்போது இயக்குநர் சீனு ராமசாமியின் தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.

Vijay Sethupathi Team Up with Tamannah

இந்தப் படத்தில் முதன்முறையாக நடிகை தமன்னாவுடன் விஜய் சேதுபதி நடிக்கிறார். சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி.

சீனு ராமசாமியின் இயக்கத்தில் 2 வது முறையாக விஜய் சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. இந்நிலையில் 3 வது முறையாக விஜய் சேதுபதி - சீனு ராமசாமி இருவரும் இணைந்திருக்கின்றனர்.

இப்படத்தில் தனது கதாபாத்திரம் மிகவும் கவர்ந்ததால் தமன்னா உடனே ஒத்துக் கொண்டுவிட்டாராம். ஜனவரி மாதம் தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

நானும் ரவுடிதான் படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் மதிப்பு கோலிவுட்டில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay Sethupathi's Next Movie Dharmadurai Directed by Seenu Ramasamy. For the first time in this film Tamannah Opposite to Vijay Sethupathi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil