»   »  இந்தா நானும் வந்துட்டேன்: ஆயுத பூஜை ரேஸில் சேர்ந்த விஜய் சேதுபதி

இந்தா நானும் வந்துட்டேன்: ஆயுத பூஜை ரேஸில் சேர்ந்த விஜய் சேதுபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயுத பூஜை ரேஸில் ஏற்கனவே சிவகார்த்திகேயன், ஜீவாவின் படங்கள் உள்ள நிலையில் விஜய் சேதுபதியின் ரெக்க படமும் சேர்ந்துள்ளது.

விஜய் சேதுபதி, தமன்னா நடித்துள்ள தர்மதுரை படம் வரும் 19ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் மற்றொரு படமான ரெக்க குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் ஜோடி சேர்ந்துள்ள ரெக்க படம் ஆயுத பூஜை ஸ்பெஷலாக வரும் அக்டோபர் மாதம் 7ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Sethupathi too joins Ayutha Poojai race

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ மற்றும் ஜீவாவின் கவலை வேண்டாம் ஆகிய படங்களும் அக்டோபர் 7ம் தேதி தான் ரிலீஸாக உள்ளன. இந்நிலையில் தான் ஆயுத பூஜை ரேஸில் ரெக்க படமும் சேர்ந்துள்ளது.

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள் இரண்டாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி சிவாவின் எதிர்நீச்சல் மற்றும் விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படங்கள் மோதின என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay Sethupathi's Rekka movie will hit screens on October 7 as Ayutha Poojai special. Siva's Remo, Jiiva's Kavalai Vendam are already there in Ayutha Poojai race.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil