»   »  பாரதிராஜா நடித்த 'குரங்கு பொம்மை'... அனிமேஷன் போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி!

பாரதிராஜா நடித்த 'குரங்கு பொம்மை'... அனிமேஷன் போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாரதிராஜா நடித்துள்ள குரங்கு பொம்மை படத்தின்அனிமேஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் பாரதிராஜா - விதார்த் இணைந்து நடித்திருக்கும் படம் 'குரங்கு பொம்மை'. இப்படத்தை அறிமுக இயக்குநர் நித்திலன் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக டெல்னா டேவிஸ் நடித்திருக்கிறார். பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, ரமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.


Vijay Sethupathu releases animated poster of Kurangu Bommai

மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக்கொண்டே இருக்கும். அதன் குறியீடாக வைத்து 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கியிருக்கிறார் நித்திலன். மேலும் ஒரு நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்புதான் கதையின் கருவாம். இதில் விதார்த்துக்கு அப்பாவாக பாரதிராஜா நடித்துள்ளார்.


அப்பா, மகனுக்கும் இடையேயான ஒரு பாசத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்களாம்.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் 'மெகா ஸ்டார்' மம்முட்டி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது ரசிகர்களிடையெ நல்ல வரவேற்பு பெற்றது.


இதையடுத்து இன்று நடிகர் விஜய் சேதுபதி தனது பேஸ்புக்கில் 'குரங்கு பொம்மை' படத்தின் அனிமேட்டட் போஸ்டரை வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

English summary
Actor Vijay Sethupathy has released the animated poster of Bharathiraja starring Kurangu Bommai

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil