»   »  விஜய் சேதுபதி- ரம்யா நம்பீசன்... மீண்டும் சேரும் பீட்சா ஜோடி!

விஜய் சேதுபதி- ரம்யா நம்பீசன்... மீண்டும் சேரும் பீட்சா ஜோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பீட்சா படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் ஜோடி சேருகிறார் ரம்யா நம்பீசன்.

விஜய் சேதுபதி நடித்து தயாரிக்கும் படம் ‘சேதுபதி'. பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கும் இந்தப் படத்தில் முதல் முறையாக விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

மதுரை பின்னணியில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிக்கு வெளியேயும், வீட்டிற்குள்ளேயும் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

விஜய சேதுபதி

விஜய சேதுபதி

இப்படம் குறித்து விஜய் சேதுபதி கூறும்போது, "இப்படத்தில் நான் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறேன். இதற்கு முன் எத்தனையோ படங்களில் போலீசாக நடிக்க வாய்ப்புகள் வந்தும் இப்படி ஒரு அழுத்தமான கதைக்காகக் காத்திருந்தேன்.

இரு குழந்தைகளுக்குப் பெற்றோராக

இரு குழந்தைகளுக்குப் பெற்றோராக

பண்ணையாரும் பத்மினியும் படம் உருவாகும் போதே இயக்குநர் என்னிடம் இந்த கதையைக் கூறியிருந்தார். யதார்த்தமான கதை. போலீஸ்காரனின் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையை உருவாக்கியிருக்கிறோம். எனக்கு மனைவியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். இரு குழந்தைகளுக்குப் பெற்றோராக நடித்துள்ளோம்.

தயக்கம்

தயக்கம்

இப்படத்தின் தலைப்பு என் பெயரிலேயே இருப்பதால் முதலில் தலைப்பு வைக்க தயங்கினேன். பின்னர் கதைக்கு பொருத்தமாக இருப்பதால் சம்மதித்தேன்... ," என்றார்.

எதிர்காலத்தில்...

எதிர்காலத்தில்...

இனிமேல் ஆக்‌ஷன் படத்தில் தான் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, எதிர்காலத்தைப் பற்றி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை, நல்ல கதைகள் அமைந்தால் எந்த கதாபாத்திரத்திலும் நடிப்பேன்," என்றார்.

ஏவிஎம் படம்

ஏவிஎம் படம்

90களில் இதே தலைப்பில் விஜயகாந்தை வைத்து ஒரு படம் எடுத்தனர் ஏவிஎம் நிறுவனத்தினர். அதுவும் பெரிய வெற்றிப் படம்தான். போலீஸ் கதைதான். எனவே ஏவிஎம்மிடம் உரிய அனுமதி பெற்று இந்தத் தலைப்பைப் பயன்படுத்தியுள்ளார்களாம்.

English summary
After Pizza, Vijay Sethupathy - Ramya Nambeesan joining again for Sethupathy movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil