»   »  விஜய் சேதுபதி - டி ராஜேந்தர் படத்துக்கு தலைப்பு என்ன தெரியுமா? #Kavan

விஜய் சேதுபதி - டி ராஜேந்தர் படத்துக்கு தலைப்பு என்ன தெரியுமா? #Kavan

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னடா இது... விஜய் சேதுபதியின் அடுத்த படமே ரிலீசுக்குத் தயார்னு சொல்றாங்க... ஆனா இன்னும் தலைப்பே அறிவிக்கலயே என்ற கமெண்டுகள் கேவி ஆனந்துக்கு கேட்டுடுச்சி போல... இதே அறிவித்துவிட்டார்கள்.

Vijay Sethupathy's next movie titled Kavan

கவண்... இதுதான் விஜய் சேதுபதி - டி ராஜேந்தர் படத்தின் புதிய தலைப்பு. கவண் என்றால் உண்டிக்கோல் என்று அர்த்தம். கிராமப்புறங்களில், சென்னை நகர்புறத்துச் சந்தைகள் இப்போது நல்ல விற்பனையில் இருக்கும் ஒரு எளிய ஆயுதம் இந்த கவண். பறவைகளை வீழ்த்த அதிகம் பயன்படும் (ஒரு படத்தில் இந்த கவணை வைத்து இளநீரே பறிப்பார் விஜயகாந்த்!)

Vijay Sethupathy's next movie titled Kavan

மாற்றான், அநேகன் படங்களை அடுத்து, கே.வி. ஆனந்த், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் தொடர்ந்து இயக்கும் மூன்றாவது திரைப்படம் இது. பெரும் பொருட்செலவில் மிக பிரமாண்டமான செட்கள் அமைத்து, திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

Vijay Sethupathy's next movie titled Kavan

இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி மடோனா செபாஸ்டியன். ஏற்கெனவே காதலும் கடந்து போகும் படத்தில் ஜோடி போட்டவர்.

Vijay Sethupathy's next movie titled Kavan

இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கும் 18-வது படம் இந்த கவண். டிசம்பரில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Vijay Sethupathi's KV Anand directed movie has titled as Kavan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil