»   »  இதனால் தான் விஜய்யை அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்களாம்!

இதனால் தான் விஜய்யை அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்களாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையதளபதி விஜய் தனது ரசிகரின் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார்.

புலி படத்தை அடுத்து இளைய தளபதி விஜய் காக்கி படத்தில் நடித்து வருகிறார். அவர் என்ன தான் படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் ரசிகர்களுக்கு நேரம் ஒதுக்க தவறுவது இல்லை. இந்நிலையில் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவருக்கு அவரை சந்தித்து பேச வேண்டும் என்ற ஆசை.

Vijay spends time with a fan's family

இந்த ஆசை பற்றி அறிந்த அவரின் மனைவி நண்பர் மூலம் விஜய்யை அணுகி தனது கணவரின் ஆசையை பற்றி தெரிவித்துள்ளார். இதை கேட்ட விஜய் அவரை நான் சந்திக்க தயார் என தெரிவித்துள்ளார்.

தெரிவித்ததோடு மட்டும் அல்லாமல் அந்த ரசிகரின் குடும்பத்தை சந்தித்து பேசி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். மேலும் அந்த ரசிகரின் குழந்தையோடும் விளையாடினார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

விஜய் என்ன தான் பிசியாக இருந்தாலும் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற தவறாததால் தான் அவருக்கு கோடிக் கணக்கான ரசிகர்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது ரசிகரை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை விஜய்யும் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார்.

English summary
Vijay has surprised his fan by meeting with him and his family. He even played with their son and the pictures taken during the meet are going viral.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil