சரவெடியாக தெறிக்கப் போகும் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்: விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த அப்டேட்

சென்னை: விஜய் தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.

'வாரிசு' படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு அப்டேட் மோடில் விஜய் ரசிகர்கள்

வாரிசு அப்டேட் மோடில் விஜய் ரசிகர்கள்

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் வாரிசு, அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்கு ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். ஏற்கனவே ஸ்டைலிஷான கெட்டப்பில் விஜய்யின் 3 போஸ்டர்களை வெளியிட்டுள்ள படக்குழு, அடுத்ததாக ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட திட்டமிட்டு வருகிறது.

தமன் இசையில் விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள்

தமன் இசையில் விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள்

விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, எஸ்ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், சரத்குமார் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே வாரிசு படத்தில் நடித்து வருகிறது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். விஜய்யுடன் முதன்முறையாக இணைந்துள்ள தமன், அல்டிமேட்டான மாஸ் ஹிட் பாடல்களை கம்போஸ் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமனின் இசையில் 'வாரிசு' ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகிறதா?

ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகிறதா?

விஜய் ரசிகர்களுக்கு எப்போதுமே அவரது படத்தில் இருந்து வெளியாகும் ஃபர்ஸ்ட் சிங்கிள் தரமான சம்பவமாக இருக்கும். வாரிசு படத்தின் முதல் பாடலும் அப்படியே இருக்கும் என, ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அவர்களை குஷிப்படுத்தும் விதமாக தீபாவளி ஸ்பெஷலாக வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. விரைவில் படக்குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

விஜய் படத்தின் அப்டேட்கள் சொன்ன நேரத்தில் மிகச் சரியாக வந்துவிடும் என்பதால், அவரது ரசிகர்கள் வரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து எதிர்பார்ப்பில் உள்ளனர். முதன்முறையாக விஜய் - தமன் காம்போ என்பது, ரசிகர்களின் பல்ஸை இன்னும் எகிற வைத்துள்ளது. முக்கியமாக தீபாவளிக்கு வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் வரவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது. இதனிடையே விரைவில் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக இருக்கும் 'தளபதி 67' படத்தின் அபிசியல் அப்டேட்டும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X