»   »  கத்தரிக்கலாம், கத்தரிக்கலாம் வா..: பைரவா எடிட்டரை வியக்க வைத்த விஜய்

கத்தரிக்கலாம், கத்தரிக்கலாம் வா..: பைரவா எடிட்டரை வியக்க வைத்த விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பைரவா படத்தில் தான் நடித்த காட்சிகளை கத்தரிக்க முழுமனதுடன் சம்மதம் தெரிவித்திருக்கிறார் விஜய்.

விஜய்யின் பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது. படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் அளித்துள்ளது. படத்தை பார்த்த எடிட்டர் பிரவீன் ரொம்ப நீளமாக இருப்பதாக உணர்ந்தார்.


Vijay surprises Bairavaa editor

விஜய் வரும் சில காட்சிகளை நீக்க திட்டமிட்டார். ஆனால் காட்சிகளை நீக்க விஜய் என்ன சொல்வாரோ என்ற தயக்கம் அவருக்கு. இருப்பினும் காட்சிகளை நீக்குவது பற்றி ஒருவழியாக விஜய்யிடம் கூறியிருக்கிறார்.


அதற்கு விஜய்யோ, அதுக்கென்னங்கண்ணா நமக்கு படம் தான் முக்கியம், காட்சிகளை நீக்குங்கள் என்று கூலாக கூறியுள்ளார். இதை கேட்ட எடிட்டருக்கு ஒரே குஷியாம்.


எவ்வளவு பெரிய ஹீரோ, தனது காட்சிகளை நீக்குமாறு கொஞ்சமும் கோபம் இல்லாமல் கூறினாரே என்று பிரவீன் வியந்தாராம்.

English summary
Vijay has surprised editor Praveen of his upcoming movie Bairavaa by allowing him to cut some scenes.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil