சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் பிரபல யூடியூபர்.. யாருன்னு தெரியுமா!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் இம்மாதம் முதல் வாரத்தில் பூஜை போடப்பட்டு சூட்டிங் துவங்கப்பட்டது.

விறுவிறுப்பாக துவங்கிய இந்தப் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை.

சிவகார்த்திகேயனுடன் அதீதி ஷங்கர், யோகி பாபு, மிஷ்கின் ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் இணைந்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் டான் படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றுள்ளன. இந்த இரண்டு படங்களிலும் இயல்பான சிவகார்த்திகேயனின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், இந்தப் படங்கள் 100 கோடி க்ளப்பில் இணைந்தன. இதையடுத்து தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் உற்சாகமடைந்துள்ளார்.

பிரின்ஸ் படம்

பிரின்ஸ் படம்

இதனிடையே அடுத்ததாக சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் டீச்சராக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

மாவீரன் படம்

மாவீரன் படம்

அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் அவருக்கு சாய் பல்லவி ஜோடி சேர்ந்துள்ளார். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. இதனிடையே சிவகார்த்திகேயனின் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகவுள்ள மாவீரன் படத்தின் சூட்டிங் இம்மாதம் முதல் வாரத்தில் பூஜையுடன் துவங்கியது.

சிவகார்த்திகேயன் தங்கையாக மோனிஷா பிளசி

சிவகார்த்திகேயன் தங்கையாக மோனிஷா பிளசி

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார் அதீதி ஷங்கர். இதேபோல அனுபவ நடிகை சரிதா, மிஷ்கின், யோகி பாபு, கவுண்டமணி உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே பிரபல யூடியூபரும் விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் போட்டியாளருமான மோனிஷா பிளசி இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய் டிவி திறமைகள்

விஜய் டிவி திறமைகள்

சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவில் கால்பதித்தவர். இவருக்கு அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் அமைந்த நிலையில், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், என அடுத்தடுத்து பன்முகத் திறமைகளையும் வெளிப்படுத்தி வருகிறார். இதனிடையே விஜய் டிவியில் இருந்து இவர் அடுத்தடுத்த திறமைகளை தன்னுடைய படங்களில் பயன்படுத்தி வருகிறார்.

பாதையை மறக்காத சிவகார்த்திகேயன்

பாதையை மறக்காத சிவகார்த்திகேயன்

சமீபத்தில் வெளியான இவரது டான் படத்தில் பிரபல பாடகி மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் ஷிவாங்கியை களமிறக்கியிருந்தார். இந்நிலையில் தற்போது கலக்கப் போவது யாரு புகழ் மோனிஷா பிளசியை தனது மாவீரன் படத்தில் தங்கையாக களமிறக்கியுள்ளார். தான் கடந்துவந்த பாதையை மறக்காத சிவகார்த்திகேயனின் இந்த குணம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

சூட்டிங் நிறுத்தம்?

சூட்டிங் நிறுத்தம்?

மாவீரன் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக துவங்கிய நிலையில், சில தினங்களிலேயே நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சாந்தி டாக்கீஸ் தயாரித்துவரும் இந்தப் படம் நிதி நெருக்கடி காரணமாக தற்போது சூட்டிங் தள்ளிப் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X