TVK Maanadu: கள்ளழகர் மண்ணில் மாநாடு.. அழகரு வாராருனு விஜய்யை கொஞ்சும் தவெகவினர்.. வீடியோ பாருங்க!

மதுரை: விஜய்க்கு தமிழ்நாட்டிலேயே கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். அவர் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை நம்பி, தன்னை தலையில் வைத்துக் கொண்டாடும் தமிழ் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். ஏற்கனவே அரசியல் களத்திலும் சரி, தேர்தல் களத்திலும் சரி அனுபவம் வாய்ந்த, தமிழ்நாட்டை ஆட்சி செய்த கட்சிகள் உள்ளன. இப்படி இருக்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அதற்கு தனது கட்சி நிர்வாகிகளை தயார் செய்யத்தான் விஜய், மாநாட்டை நடத்துகிறார் என கூறப்படுகிறது.

Vijay TVK Madurai Maanadu Fans Reels Video Goes Trending
Photo Credit:
கட்சி தொடங்கிய இரண்டாவது ஆண்டில் இரண்டாவது மாநில மாநாடு நடத்தப்படுகிறது. முதலில் இந்த மாநாட்டிற்கு விஜய்யின் திருமண நாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி தான் முடிவு செய்யப்பட்டது. ஆனால் காவல்துறை தரப்பில் 21ஆம் தேதி நடத்திக் கொள்ள அறிவுருத்தப்பட்டதால், 21ஆம் தேதி மாநாடு நடைபெற்று வருகிறது.

மாநாட்டில் கலந்து கொள்ள, நேற்றில் இருந்தே தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் என பலரும் மதுரையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் நேற்று இரவே, மாநாட்டு திடலுக்கு அருகில் தங்கிக் கொண்டார்கள். மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்கள் மதியத்திற்கு மேல் தான் தொடங்கும் என்றாலும் விஜய்யை அருகில் பார்த்துவிட வேண்டும் என மேடைக்கு அருகிலும், இருக்கைகளுக்கு நடுவே, விஜய் நடக்க அமைக்கப்பட்டுள்ள பாதையை ஒட்டியும் ரசிகர்களும் தொண்டர்களும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கைகளை பிடித்து அமர்ந்து கொண்டு வருகிறார்கள்.

Vijay TVK Madurai Maanadu Fans Reels Video Goes Trending
Photo Credit:

பலரும் மாநாட்டு திடலில் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் சிலர் ஏற்கனவே எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது சமூக வலைதள பக்கத்தில் வீடியோக்களாக பகிர்ந்து வருகிறார்கள். குறிப்பாக மாநாடு மதுரையில் நடப்பதால், மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்க கூடிய கள்ளழகருக்கு எழுதப்பட்ட பாடலை விஜய்க்கு போட்டு பகிர்ந்து வருகிறார்கள். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அழகரு வாராரு நம்ம அழகரு வாராரு என்ற பாடல் விஜய்க்கு நன்றாகவே பொருந்திப் போயுள்ளதால் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X