Don't Miss!
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- News
லைவ் வீடியோ.. அயோத்தி ராமர் கோவிலை இடிப்பதாக மிரட்டல்.. பிஎப்ஐயை சேர்ந்த 3 பேரிடம் என்ஐஏ விசாரணை!
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மகான் படத்தை பார்த்த விஜய்... என்ன சொல்லி இருக்கார் தெரியுமா ?
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தொடர்ந்து நடிகர் விஜய்யும், விக்ரம் -துருவ் விக்ரம் நடித்த மகான் படத்தை பார்த்து விட்டு, படம் பற்றிய தனது கருத்தை தெரிவித்துள்ளார். விஜய் என்ன சொன்னார் என்பதை டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விக்ரமின் 60 வது படமான மகான் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் முதல் முறையாக விக்ரம், தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார். ஆக்ஷன், த்ரில்லர் படமான இந்த படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 10 ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது.
பெருமைப்படுகிறேன் தீபிகா... முத்தம் கொடுத்து பாராட்டிய ரன்வீர் சிங்… ரொமாண்டிக் புகைப்படம்!

அனைவரையும் கவர்ந்த மகான்
ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பிலும் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது மகான் படம். விக்ரம், துருவ் விக்ரம் இருவரின் நடிப்பையும், ஆக்ஷன் காட்சிகளையும் அனைவரும் பாராட்டி உள்ளனர். திரைக்கதை, இசை என அனைத்து அம்சங்களும் அனைவரையும் கவர்ந்திருந்தது. இந்த படத்தை ஏன் இவர்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்யவில்லை. தியேட்டரில் வந்திருந்தால் மாஸாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கூறி வந்தனர்.

பாராட்டிய ரஜினி
இந்நிலையில் இந்த படத்தை பார்த்த ரஜினி, Excellent movie என பாராட்டி உள்ளார். கார்த்திக் சுப்பராஜை அழைத்து தனது பாராட்டை ரஜினி தெரிவித்துள்ளார். படத்தை பார்த்து விட்டு ரஜினியே பாராட்டி விட்டதால் கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் செம சந்தோஷத்தில் இருந்து வந்தனர்.

விஜய் என்ன சொன்னார்
ரஜினியை தொடர்ந்து விஜய்யும் மகான் படத்தை பார்த்துள்ளாராம். படத்தை பார்த்து விட்டு தயாரிப்பாளர் லலித் குமாருக்கு போன் செய்த விஜய், சூப்பர் படம் என பாராட்டினாராம். அதோடு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் டைரக்டர் கார்த்திக் சுப்பராஜிடம் தெரிவிக்கும் படியும் விஜய் கேட்டுக் கொண்டாராம். விஜய் மகான் படம் பார்த்து விட்டு பாராட்டிய தகவலை, தயாரிப்பாளர் தன்னிடம் சொன்னதாக கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்துள்ளார்.
Recommended Video

விஜய்யை இயக்க போகிறாரா
இந்த தகவலை கேள்வி பட்ட பிறகு, விஜய்யும் பாராட்டினாரா...அப்படியானால் தளபதி 69 அல்லது 70 படம் கார்த்திக் சுப்பராஜுடன் தானா என ரசிகர்கள் கேட்டுள்ளனர். அப்படி இருந்தால் செமயாக இருக்குமே என்று பலர் கேட்டுள்ளனர்.