»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு தரப்போவதில்லை.எந்த கட்சிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்யமாட்டேன் என நடிகர் விஜயகாந்த்தெரிவித்துள்ளார்.

உதகமண்டலத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,தமிழகத்தில் கடந்த முறை நடந்த ஆட்சியை பற்றி நான் எந்த விதமான கருத்தும் கூறவிரும்பவில்லை.

5 ஆண்டுகளாக நடந்து வரும். தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு பல நன்மைகள் நடந்துவருகின்றன.

மக்களுக்கு நன்மைகள் செய்யும் ஆட்சிதான் வரவேண்டும். கருணாநிதியையும்,ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு பேச நான் விரும்பவில்லை.

கருணாநிதி திரையுலகத்திற்கு பல நன்மைகள் செய்து வந்திருக்கிறார். சென்ற 5ஆண்டுகளில் நிறைய உ.தவிகள் செய்திருக்கிறார். திருட்டு வி.சி.டியை ஒழிப்பதற்குபல நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.

போலீசாரின் ஒத்துழைப்புதான் எங்களுக்கு தேவையான அளவு கிடைக்கவில்லை.

எங்களுக்கு தேவையான உரிமைகளை பெற முதல்வரிடம் சண்டை கூடபோட்டுள்ளோம். அந்த உரிமையையும் எங்களுக்கு தந்தவர் கருணாநிதான்.

என் நண்பர் இப்ராஹிம் ராவுத்தருக்காக நான் த.மா.காவில் சீட் கேட்கவில்லை.

கருணாநிதியும், மூப்பனாரும் எனக்கு பிடித்த தலைவர்கள். அந்த முறையில்மூப்பனாரை சந்தித்து பேசினேன். அப்போது என்னுடன் நடிகர் தியாகுவும்வந்திருந்தார். இப்ராஹிமுக்கு சீட் கேட்டிருந்தால் அதை வெளிப்படையாககூறியிருப்பேன்.

த.மா.கா.-தி.மு.க. பிரிவினை பற்றி கருத்து கூறும் அளவுக்கு எனக்கு அரசியல்அனுபவம் கிடையாது.அதில் தலையிடும் முதிர்ச்சியும் எனக்கு கிடையாது.

எனக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாது. நான் சினிமாவில் நடிக்க வருவேன் எனநினைக்கவில்லை. ஆனால் நடிக்க வந்து விட்டேன். கதாநயாகன் ஆவேன் எனநினைக்கவில்லை. கதாநாயகனாக நடித்து வருகிறேன்.

நான் அரசியலுக்கு வருவதாக முடிவெடுத்துவிட்டால் உடனே அறிவித்துவிடுவேன்.இழுபறி செய்யமாட்டேன்.

என் ரசிகர்கள் ரசிகர் மன்றத்திற்கு கொடி வேண்டும் என கேட்டதால் கொடி தயாரித்துக்கொள்ள அனுமதி கொடுத்தேன். அது திராவிடக் கட்சிக் கொடிகளின் சாயலில்இருப்பதால் நான் அரசியலில் ஈடுபடப்போவதாக கருதப்படுகிறது.

என் ரசிகர்கள் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததாக கூறப்படுவதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது.

என் ரசிகர்கள் எந்த கட்சிக்கும் வேலை பார்க்கலாம். ஆனால் என் பெயரையும், ரசிகர்மன்ற கொடியையும் உபயோகப்படுத்தக் கூடாது.

தமிழகத்தில் பணப்புழக்கம் குறைவாக இருப்பதை ஒப்புக் கொள்ள முடியாது..பணப்புழக்கம் இல்லாமல்தான் ஆடம்பரப் பொருட்களும், போர்ட் ஐகான் கார்களும்புழகத்தில் உள்ளதா?.

பூகம்பம் ஏற்பட்டதால் நிலம் வாங்கி வீடு கட்டும் மக்களின் ஆர்வம் குறைந்துள்ளது.

நான் யாருக்காகவும் பிரச்சாரம் செய்யப் போவதும் இல்லை. எந்த கட்சிக்கும் ஆதரவுதரப்போவதும் இல்லை. என்னை எந்த கட்சியினரும் பிரச்சாரத்துக்கு வருமாறு கேட்டுக்கொள்ளவில்லை. அவ்வாறு கேட்டுக் கொண்டாலும் நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil