கேப்டன பார்த்தாச்சு.. பிறந்தநாள் அதுவுமா தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது பிறந்தநாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார்.

Recommended Video

Thalaivasal Vijay - Vijayakanth | அன்றே சொன்னாரு, அதே போல செஞ்சிட்டாரு *Celebrity

விஜயகாந்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டான நிலையில், விஜயகாந்த் ரசிகர்கள் #HappyBirthdayCaptainVijayaKanth என்கிற ஹாஷ்டேக்கை போட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

நடிகர் போண்டாமணி, தேவயாணி உள்ளிட்ட பல பிரபலங்கள் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 விஜயகாந்த் பிறந்தநாள்

விஜயகாந்த் பிறந்தநாள்

1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி விருதுநகரில் உள்ள அருப்புக்கோட்டையில் பிறந்தவர் விஜயகாந்த். விஜயராஜ் எனும் பெயரை சினிமாவுக்காக விஜயகாந்த் என மாற்றிக் கொண்டார். நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கட்சி அலுவலகத்தில் கொண்டாடி வருகிறார்.

 கையசைத்த விஜயகாந்த்

கையசைத்த விஜயகாந்த்

உடல் நலக் குறைவு காரணமாக வெளிநாடுகளில் ட்ரீட்மென்ட் எடுத்து வந்த விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து கையசைத்தார். அதே பழைய பன்னீர்செல்வமாக விஜயகாந்த் கம்பீரமாக காட்சியளித்ததை பார்த்த தொண்டர்களும் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

 ரசிகர்கள் குஷி

ரசிகர்கள் குஷி

நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்தை மீண்டும் அதே கம்பீரத்துடன் பார்த்த ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் #HappyBirthdayCaptainVijayaKanth என்கிற ஹாஷ்டேக்கை போட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும், விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள் மற்றும் சினிமா படக் காட்சிகளை பதிவிட்டும் டிரெண்டிங்கை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

 கேப்டன் விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த்

சினிமாவில் கேப்டன் விஜயகாந்த் ஆக தனி ராஜாங்கத்தையே நடத்தியவர் விஜயகாந்த். ரமணா, வல்லரசு, வாஞ்சிநாதன், சின்னக் கவுண்டர், வானத்தைப் போல என விஜயகாந்தின் சூப்பர் ஹிட்டான படங்களின் காட்சிகளை மாஷ் அப்களாக போட்டும் ரசிகர்கள் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் அதே பழைய கம்பீரத்துடன் வர வேண்டும் என்றும் கேப்டனின் குரல் கேட்க காத்திருக்கிறோம் என்றும் ட்வீட் போட்டு வருகின்றனர்.

 ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

விஜயகாந்தை அவரது பிறந்தநாள் அதுவுமாக பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நடிகை தேவயாணி, நடிகர் போண்டாமணி உள்ளிட்ட பல பிரபலங்கள் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து கூறியுள்ளனர். ஆனால், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை ஏன் கூறவில்லை என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X