twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கருணாநிதியுடன் விஜயகாந்த் திடீர் சந்திப்பு திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் விஜயகாந்த் நேற்று நேற்று சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் பேச்சு நடத்தினார்.நடிகர் விஜயகாந்த் தீவிர அரசியலில் குதிக்க நாள் பார்த்து வருகிறார். செப்டம்பர் மாதம் மதுரையில் நடைபெற உள்ள தனது ரசிகர்மன்ற மாநாட்டில் கட்சி பெயரையும் கொள்கைகளையும் அறிவிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அவர் கூறுகையில், நான் அரசியலுக்கு வருவது உறுதி. அரசியல் எனக்கு சரிப்பட்டுவருமா என தீவிரமாக ஆலோசனை செய்த பிறகு தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.என்னுடைய மன்றத்தில் 24 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். என்னால் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டுவரமுடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.செப்டம்பரில் மதுரையில் ரசிகர் மன்ற மாநாடு நடைபெற உள்ளது. இதில் கட்சியின் பெயரையும், கொள்கைகளையும்அறிவிப்பேன். எந்தக் காரணத்தையும் கொண்டு அரசியல் கட்சியை தொடங்குவதில் இருந்து நான் பின் வாங்க மாட்டேன். அரசியலில் நான்காமராஜரையும், எம்.ஜி.ஆரையும் முன் உதாரணமாக வைத்து நான் செயல்படுவேன்.எனது ரசிகர்கள் கட்டுப்பாடு உடையவர்கள். அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் நான் கட்சி தொடங்கினால் சேர தயாராகஇருக்கிறார்கள். எல்லோரையும் சேர்த்தால் 1 கோடி உறுப்பினர்கள் வரும். அவர்கள் எனக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்றார்.இதற்கிடையே மத்திய அமைச்சர் அன்புமணி, விஜயகாந்துக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அவர் கூறுகையில், வெளிமாநிலங்களில் சினிமாக்காரர்கள் தங்களது தொழிலை மட்டுமே கவனிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் சிலர்முதல்வராக ஆசைப்படுகிறார்கள். இவர்களைப் போன்றவர்களால் தான் தமிழகம் மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறதுநடிகர் விஜயகாந்த் என்னையும், பாமகவினரையும் விமர்சித்தார். தனது படங்களை ஓடவைக்க செய்ய அவரது தந்திரம் தான்அது. ஆனால், அந்த தகராறுக்குப் பின் வெளியான விஜயகாந்த்தின் படங்கள் எதுவுமே ஓடவில்லை.படங்கள் ஓடாத நிலை ஏற்பட்டுவிட்டதால், இப்போது அரசியலுக்கு வரப்போவதாக அவர் கூறி வருகிறார். சுயநலத்துக்காகஅவர் அரசியலை பயன்படுத்த நினைத்தால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். அவரது அரசியல்தமிழ்நாட்டில் எடுபடப் போவதில்லை.சினிமாக்காரர்களின் தவறை தைரியமாக சுட்டிக் காட்டும் கட்சி பாமக. சினிமா சாயம் எங்கள் கட்சி மீது இல்லை. தமிழ்நாட்டில்ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.சினிமா என்பது சக்தி வாய்ந்த ஊடகம். அதன் மூலம் நாட்டு மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும். மாறாகநடிகர்கள் தங்களை ஏதோ சாமி மாதிரி சித்தரித்துக் கொண்டு, மக்களை ஏமாற்றி, அரசியலில் நுழைய நினைத்தால் நாங்கள்விடமாட்டோம்.இந்த விஜயகாந்த் இப்போது அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிக்கும் கனவோடு கிளம்பியிருக்கிறார். அவருக்கு நாங்கள் யார்என்பதை புரிய வைப்போம் என்றார்.இதற்கிடையே விஜயகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்போம். கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தயார்தமிழக பாஜக தலைவர்கள் அறிவித்தனர். ஆனால் பிறகு அத்வானி கூறுகையில் தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தனித்துபோட்டியிடும் என்று கூறினார்.இந் நிலையில் சமீபத்தில் அவர் கூறுகையில், தன்னை ஆட்சியில் இருப்போர் மிரட்டுகிறார்கள் எனவும், இதற்காக தான் பயப்படப்போவதில்லை எனவும் விஜயகாந்த் பேட்டி அளித்திருந்தார். ஆட்சியில் இருப்போர் என்றால் அதிமுக அரசா என்றுசெய்தியாளர்கள் கேட்டபோது, மத்தியிலும் ஆட்சி இருக்கிறது என்று பூடகமாக பதிலளித்தார். இதன் மூலம் திமுகவைச்சேர்ந்தவர்கள் தன்னை மிரட்டுவதாக மறைகமாக தெரிவித்தார் விஜயகாந்த்.இந் நிலையில் விஜயகாந்த் நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். நேற்று மாலை 5 மணியளவில்கோபாலபுரத்திலுள்ள கருணாநிதியின் வீட்டுக்கு சென்ற விஜயகாந்த் சுமார் 40 நிமிடங்கள் கருணாநிதியுடன் பேச்சு நடத்தினார்.இதன் பிறகு அவர் புறப்பட்டு சென்றார்.கருணாநிதியுடன் பேசியது குறித்து விஜயகாந்த் கூறுகையில், மரியாதை நிமித்தமாக தான் திமுக தலைவர் கருணாநிதியை நான்சந்தித்து பேசினேன். இதில் உள்விவகாரம் எதுவும் இல்லை. என்னிடம் சினிமா உலகம் பற்றியும், சமீபத்தில் திரைக்கு வந்த படங்கள் பற்றியும் அவர் பேசினார். என்னுடன் திரைப்படஇயக்குனர் ராம. நாராயணனும் உடனிருந்தார் என்றார். விஜயகாந்தின் அரசியல் பிரவேச அறிவிப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிற நிலையில் விஜயகாந்த் திமுகதலைவர் கருணாநிதியை சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி, விஜயகாந்த் சந்திப்பின்போது மு.க.ஸ்டாலினும் உடன் இருந்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றுவிஜயகாந்த் கூறினாலும் கூட இந்த சந்திப்பின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    By Staff
    |

    திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் விஜயகாந்த் நேற்று நேற்று சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் பேச்சு நடத்தினார்.

    நடிகர் விஜயகாந்த் தீவிர அரசியலில் குதிக்க நாள் பார்த்து வருகிறார். செப்டம்பர் மாதம் மதுரையில் நடைபெற உள்ள தனது ரசிகர்மன்ற மாநாட்டில் கட்சி பெயரையும் கொள்கைகளையும் அறிவிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அவர் கூறுகையில், நான் அரசியலுக்கு வருவது உறுதி. அரசியல் எனக்கு சரிப்பட்டுவருமா என தீவிரமாக ஆலோசனை செய்த பிறகு தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

    என்னுடைய மன்றத்தில் 24 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். என்னால் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டுவரமுடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

    செப்டம்பரில் மதுரையில் ரசிகர் மன்ற மாநாடு நடைபெற உள்ளது. இதில் கட்சியின் பெயரையும், கொள்கைகளையும்அறிவிப்பேன்.

    எந்தக் காரணத்தையும் கொண்டு அரசியல் கட்சியை தொடங்குவதில் இருந்து நான் பின் வாங்க மாட்டேன். அரசியலில் நான்காமராஜரையும், எம்.ஜி.ஆரையும் முன் உதாரணமாக வைத்து நான் செயல்படுவேன்.

    எனது ரசிகர்கள் கட்டுப்பாடு உடையவர்கள். அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் நான் கட்சி தொடங்கினால் சேர தயாராகஇருக்கிறார்கள். எல்லோரையும் சேர்த்தால் 1 கோடி உறுப்பினர்கள் வரும். அவர்கள் எனக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்றார்.

    இதற்கிடையே மத்திய அமைச்சர் அன்புமணி, விஜயகாந்துக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அவர் கூறுகையில், வெளிமாநிலங்களில் சினிமாக்காரர்கள் தங்களது தொழிலை மட்டுமே கவனிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் சிலர்முதல்வராக ஆசைப்படுகிறார்கள். இவர்களைப் போன்றவர்களால் தான் தமிழகம் மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது

    நடிகர் விஜயகாந்த் என்னையும், பாமகவினரையும் விமர்சித்தார். தனது படங்களை ஓடவைக்க செய்ய அவரது தந்திரம் தான்அது. ஆனால், அந்த தகராறுக்குப் பின் வெளியான விஜயகாந்த்தின் படங்கள் எதுவுமே ஓடவில்லை.

    படங்கள் ஓடாத நிலை ஏற்பட்டுவிட்டதால், இப்போது அரசியலுக்கு வரப்போவதாக அவர் கூறி வருகிறார். சுயநலத்துக்காகஅவர் அரசியலை பயன்படுத்த நினைத்தால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். அவரது அரசியல்தமிழ்நாட்டில் எடுபடப் போவதில்லை.

    சினிமாக்காரர்களின் தவறை தைரியமாக சுட்டிக் காட்டும் கட்சி பாமக. சினிமா சாயம் எங்கள் கட்சி மீது இல்லை. தமிழ்நாட்டில்ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

    சினிமா என்பது சக்தி வாய்ந்த ஊடகம். அதன் மூலம் நாட்டு மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும். மாறாகநடிகர்கள் தங்களை ஏதோ சாமி மாதிரி சித்தரித்துக் கொண்டு, மக்களை ஏமாற்றி, அரசியலில் நுழைய நினைத்தால் நாங்கள்விடமாட்டோம்.

    இந்த விஜயகாந்த் இப்போது அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிக்கும் கனவோடு கிளம்பியிருக்கிறார். அவருக்கு நாங்கள் யார்என்பதை புரிய வைப்போம் என்றார்.

    இதற்கிடையே விஜயகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்போம். கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தயார்தமிழக பாஜக தலைவர்கள் அறிவித்தனர். ஆனால் பிறகு அத்வானி கூறுகையில் தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தனித்துபோட்டியிடும் என்று கூறினார்.

    இந் நிலையில் சமீபத்தில் அவர் கூறுகையில், தன்னை ஆட்சியில் இருப்போர் மிரட்டுகிறார்கள் எனவும், இதற்காக தான் பயப்படப்போவதில்லை எனவும் விஜயகாந்த் பேட்டி அளித்திருந்தார். ஆட்சியில் இருப்போர் என்றால் அதிமுக அரசா என்றுசெய்தியாளர்கள் கேட்டபோது, மத்தியிலும் ஆட்சி இருக்கிறது என்று பூடகமாக பதிலளித்தார். இதன் மூலம் திமுகவைச்சேர்ந்தவர்கள் தன்னை மிரட்டுவதாக மறைகமாக தெரிவித்தார் விஜயகாந்த்.

    இந் நிலையில் விஜயகாந்த் நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். நேற்று மாலை 5 மணியளவில்கோபாலபுரத்திலுள்ள கருணாநிதியின் வீட்டுக்கு சென்ற விஜயகாந்த் சுமார் 40 நிமிடங்கள் கருணாநிதியுடன் பேச்சு நடத்தினார்.இதன் பிறகு அவர் புறப்பட்டு சென்றார்.

    கருணாநிதியுடன் பேசியது குறித்து விஜயகாந்த் கூறுகையில், மரியாதை நிமித்தமாக தான் திமுக தலைவர் கருணாநிதியை நான்சந்தித்து பேசினேன். இதில் உள்விவகாரம் எதுவும் இல்லை.

    என்னிடம் சினிமா உலகம் பற்றியும், சமீபத்தில் திரைக்கு வந்த படங்கள் பற்றியும் அவர் பேசினார். என்னுடன் திரைப்படஇயக்குனர் ராம. நாராயணனும் உடனிருந்தார் என்றார்.

    விஜயகாந்தின் அரசியல் பிரவேச அறிவிப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிற நிலையில் விஜயகாந்த் திமுகதலைவர் கருணாநிதியை சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கருணாநிதி, விஜயகாந்த் சந்திப்பின்போது மு.க.ஸ்டாலினும் உடன் இருந்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றுவிஜயகாந்த் கூறினாலும் கூட இந்த சந்திப்பின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    Read more about: election karunanidhi vijayakanth
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X