»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நடிகை விஜயசாந்தி வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதில் வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது. இச்சம்பவம் நடந்த போது நடிகை விஜயசாந்தி வீட்டில் இல்லை.

பாஜகவில் உள்ள நடிகை விஜயசாந்தி சமீப காலமாக ஜெயலலிதாவை ஆதரித்து வருகிறார். இதற்கு தமிழகபாஜகவிலும் , திமுகவிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் "இளஞ்ஜோடிகள்" படத்தில் அறிமுகமான நடிகை விஜயசாந்தி, "மன்னன்", "வைஜயந்தி ஐபிஎஸ்", "லத்திஜார்ஜ்" உள்பட பல தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது வீடு சென்னை தியாகராயநகர் உஸ்மான் சாலையில் உள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு இவரது வீட்டுக்குஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கும்பல், வீட்டின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டுத் தப்பித்து விட்டது.

இதையடுத்து வீட்டிலிருந்து வெளியே வந்த விஜயசாந்தியின் மானேஜர் ஜெயராஜ், பாண்டிபசார் போலீஸாருக்குத்தகவல் கொடுத்தார்.

இந்தச் சம்பவத்தில் விஜயசாந்தி வீட்டு முன்கதவுகள் சேதமடைந்தன. தோட்டத்தில் இருந்த செடிகள் கருகிவிட்டன.

விஜயசாந்திக்கு நெப்போலியன் கண்டனம்:

முன்னதாக, திமுக எம்.எல்.ஏ. நடிகர் நெப்போலியன் நடிகை விஜயசாந்தியைக் கண்டித்து ஒரு அறிக்கைவெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது:

திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, போலீஸார் மிகவும் அராஜகமாக நடந்து கொண்ட சம்பவம்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நேரத்தில் கருணாநிதி நடிக்கிறார் என்று ஜெயா டிவியில்பேட்டியளித்துள்ளார் விஜயசாந்தி.

கருணாநிதி நடிக்கிறார் என்று கூறும் விஜயசாந்தி, சினிமாவில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகவாழ்க்கையில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜயசாந்தி அரசியலை ஆந்திராவுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.தமிழகத்துக்குக் கொண்டு வர வேண்டாம்.

ஜெயலலிதாவுக்கு ஆதரவாகப் பேசி வரும் விஜயசாந்தி, பேசாமல் ஜெயலலிதாவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்து,அதிமுகவில் சேர்ந்து அக்கட்சியின் கொள்கைப் பரப்புச்செயலாளராக ஆகி விடலாம்.

விஜயசாந்தி மீது பாஜகவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார் நெப்போலியன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil