»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு விஜயகாந்த் மீண்டும் போட்டியிடுகிறார். இதேபோல சரத்குமாரும் பொதுச் செயலாளர் பதவிக்குபோட்டியிடுகிறார்.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வரும் 30ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.

தலைவர் பதவிக்கு விஜயகாந்த்தையும், பொதுச் செயலாளர் பதவிக்கு சரத்குமாரையும், துணைத் தலைவர்கள் பதவிக்கு நெப்போலியன்மற்றும் எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோரையும் மீண்டும் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்க ரகசியப் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

இதில் சுமூக முடிவு எட்டப்பட்டதையடுத்து தலைவர் பதவிக்கு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் விஜய்காந்த். அதேபோல, பொதுச்செயலாளர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதேபோல, நெப்போலியன், எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் துணைத் தலைவர்கள் பதவிக்கும்,பொருளாளர் பதவிக்கு கே.என்.காளையும்மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இவர்கள் அனைவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று நடிகர் சங்க வட்டாரத்தில் கூறப்படுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய 10ம் தேதி கடைசி நாளாகும்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil