»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

காரசாரமான மோதல்களுக்கிடையே இன்று நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது.

ஜெயிக்கப் போவது விஜயகாந்த் அணியா, தேவி அணியா என்பது என்பது இன்றே தெரிந்து விடும்.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். தற்போது சங்கத்தலைவராக விஜயகாந்த், பொதுச் செயலாளர் சரத்குமார், துணைத் தலைவர்களாக நிெப்போலியன்,எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

இவர்களது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தேர்தல் நடத்தாமல் ஒரு மனதாக மீண்டும் ஒருமுறைபதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அந்தப் பதவிக்காலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தல்நடந்தது.

விஜய்காந்த் Vs தேவி:

விஜயகாந்த் அணி சார்பில் சரத்குமார், நெப்போலியன், எஸ்.எஸ்.சந்திரன், ஆகியோர் மீண்டும்போட்டியிடுகிறார்கள். எதிர்த் தரப்பில் தலைவர் பதவிக்கு தேவி, பொதுச் செயலாளர் பதவிக்கு ராஜா ஆகியோரும்,துணைத் தலைவர் பதவிக்கு கிரிதரனும் போட்டியிடுகிறார்கள்.

காலை 8 மணிக்கு தி.நகர் நடிகர் சங்க அலுவலக வளாகத்தில் தேர்தல் தொடங்கியது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படிஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன், உதவி தேர்தல் அதிகாரி ஜெ.ஜெ.மோகன் மற்றும் 4 வழக்கறிஞர்கள் தேர்தலைகண்காணித்தனர்.

விஜயகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ், அப்பாஸ், எஸ்.எ.சந்திரன், நெப்போலியன், சார்லி உள்ளிட்டோர்காலையிலேயே தங்களது வாக்குகளை அளித்தனர்.

சூர்யா-மாதவன்:

தொடர்ந்து சரத்பாபு, சாருஹாசன், பார்த்திபன், நம்பியார், ராஜேஷ், பாண்டியன், தியாகு, எஸ்.வி.சேகர்,தியாகராஜன், விக்ரம், சூர்யா, சிம்பு, சிபிராஜ், பிரஷாந்த், மாதவன், ராதிகா, தேவயானி, லதா, ஸ்ரீபிரியா, அஞ்சலிதேவி, வாசுகி, கே.ஆர்.வத்சலா, சபீதா ஆனந்த், ராஜசுலோச்சனா உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

மொத்தம் 1977 வாக்குகள் உள்ளன. இவர்களில் வெளியூர் படப்பிடிப்புகளில் இருந்த 315 பேர் தபால் மூலம்வாக்களித்துள்ளனர்.

பாண்டியராஜனுக்கு ஓட்டில்லை:

நடிகர்கள் தாமு, பாண்டியராஜன் ஆகியோர் வாக்களிக்க வந்தபோது அவர்களது வாக்குகள் பட்டியலில் இல்லைஎன்று கூறப்பட்டதால் இருவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

விஜய்காந்தை எதிர்த்து போட்டியிடும் தேவி ஆரம்ப காலத்தில் தூர்தர்ஷன் நாடகங்களில் நடித்தவர். சினிமாவிலும்நடித்துள்ளார். விஜயகாந்த்தை இவர் எதிர்த்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தபோது இவருக்கு என்நசெல்வாக்கு இருக்கப்போகிறது என்று நினைத்த விஜயகாந்த் தரப்புக்கு நல்லதம்பி ரூபத்தில் அதிர்ச்சி வைத்தியம்கிடைத்தது.

கே.ஆர்.விஜயா ஆதரவு:

நடிகர் சங்கத்தில் நெடுநாளைய உறுப்பினராக இருப்பவர் நல்லதம்பி. முன்பு ராதாரவிக்கு நெருக்கமாக இருந்தார்.நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடக நடிகர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது என்று இவர்கோர்ட்டில் கேஸ் போட்டதால், வாக்காளர் பட்டியலிலிருந்து பல உறுப்பினர்களின் பெயர்கள் (கோர்ட்உத்தரவுப்படி) நீக்கப்பட்டன.

நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடக நடிகர்கள். இவர்கள்எப்போதுமே விஜயகாந்த்துக்கு ஆதரவாக இருப்பவர்கள். இதனால் விஜயகாந்த் தரப்பு அப்செட் ஆனது.குறிப்பாக விஜயகாந்த் கடுப்பாகிப் போனார்.

இந் நிலையில் தேவி குரூப்புக்கு கே.ஆர்.விஜயா, எஸ்.வி.சேகர் போன்றோர் ஆதரவு தெரிவிப்பதாக செய்திகள்வரவே விஜயகாந்த் தரப்பு கோபமடைந்தது.

நிருபர்களிடம் பாய்ந்த விஜய்காந்த்:

2 நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் செய்தியாளர்களை அழைத்தார். அவருடன் நடிகை குஷ்பு, ராதாரவி, பயில்வான்ரங்கநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். எடுத்த எடுப்பிலேயே ஏக கோபத்தில்தான் தனது பேச்சைத்தொடங்கினார் விஜயகாந்த்.

இங்கே வரும்போதே கோபத்துடன்தான் வந்தேன். உங்களிடம் கோபமாக பேச வேண்டும் என்று நினைத்துத்தான்வந்தேன். ஆனால் என்னை ராதாரவி சாந்தப்படுத்தியுள்ளார். இருந்தாலும் உங்கள் மீது உள்ள கோபம்போகவில்லை என்று கேப்டன் ஆரம்பிக்கவே ஒன்றும் புரியாமல் நிருபர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

நானும் அவரும் ஒன்னா?:

விஜயகாந்த் தொடர்ந்தார்: உங்களுடன் நான் 25 வருடமாக பழகி வருகிறேன். ஆனால் நேற்று வந்த (தேவி குரூப்)சிலருக்கு ஆதரவாக, என்னையும் அவர்களையும் சமமாக நினைத்து செய்திகள் போடுகிறீர்கள். இதை நான்எதிர்பார்க்கவில்லை. என்னை எப்படி அவர்களுக்கு சமமாக வைத்து நீங்கள் செய்தி போடலாம்? என்று கோபமானவார்த்தைகளில் விஜயகாந்த் சீறினார்.

அப்போது ஒரு வார்த்தையை விட்டார் விஜயகாந்த். அவர்களுக்கு ஆதரவாக நீங்கள் செய்தி போட்டதால் எனக்குஒன்றும் நிஷ்டமில்லை. அவர்கள் மூலம் உங்களது ஒரு நாள் சம்பளம் உங்களுக்குக் கிடைத்திருக்கும்.பரவாயில்லை (அதாவது தேவியிடம் நீங்கள் காசு வாங்கிவிட்டீர்கள்) என்று விஜயகாந்த் கூறவே நிருபர்கள்கோபமடைந்தனர்.

பயில்வான் காட்டவிருந்த புஜபலம்:

இதைக் கேட்டதும் நாளிதழ் நிருபர் ஒருவர் எழுந்து, சார், நீங்கள் பேசுவது சரியல்ல என்று கூற, உடனேபயில்வான் ரங்கநாதன் கோபத்துடன் எழுந்துள்ளார். அவரை ஒரு சினிமா பி.ஆர்.ஓ. தடுத்துஅமைதிப்படுத்தியுள்ளார்.

அப்போது எழுந்த ஒரு மாதப் பத்திரிக்கை நிருபர் எழுந்து, இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்,. எங்களைப்பேட்டிக்கு அழைத்து அவர்கள் கூறுவதை அப்படியே வெளியிடுகிறோம். இதில் யாரையும் நாங்கள் பிரித்துப்பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார்.

கேப்டனுக்கு குஷ்பு ஆதரவு:

அப்போது நடிகை குஷ்பு குறுக்கிட்டு, அவர்கள் சொன்னதை நீங்கள் போடுங்கள். அதற்காக விஜயகாந்த் பெயரைஏன் இழுக்கிறீர்கள்? விஜயகாந்த்தை எதிர்த்து என்று ஏன் போடுகிறீர்கள்? என்று கேட்க,

இதையடுத்து அதே மாதப் பத்திரிக்கையின் நிருபர் எழுந்து, மேடம், நீங்கள் சொல்வது சரியில்லை. ஒரு கிசு கிசுசெய்தி என்றால் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு, விசாரித்துப் போடலாம். நடிகை தேவி கொடுத்தது ஒரு பேட்டி,இப்போது நீங்கள் கொடுக்கும் பேட்டியையும் நாங்கள் அப்படியேதான் போடுவோம். அதேபோலத்தான் தேவிபேட்டியையும் போட்டோம் என்று கூறியுள்ளார்.

பேட்டி வேறு பக்கம் போவதைப் பார்த்த ராதாரவி குறுக்கிட்டு, விடுங்க சார், இதெல்லாம் பிரச்சினையாக்கவேண்டாம் என்று நிருபர்களை சாந்தப்படுத்தினார், விஜயகாந்த்தையும் அமைதிப்படுத்தினார்.

சுனாமி....

இந்தி நடிகர் விவேக் ஓபராய் சுனாமி பாதித்த பகுதிகளுக்கு போய் சேவை செய்கிறார். தமிழ் நடிகர்களை அங்கு பார்க்க முடியவில்லையே என்று ஒரு நிருபர்கேட்க, தமிழ் நடிகர்கள் அந்தப் பகுதிகளுக்கு சென்றால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படும், கூட்டம் கூடும். அதனால்தான் செல்லவில்லை என்றார்விஜயகாந்த் கடுப்புடன்.

அத்தோடு சட்டுபுட்டென்று பேட்டியை முடித்துக் கொண்டு இறுகிய முகத்துடன் அங்கிருந்து கிப்பிச் சென்றார்விஜய்காந்த்.

மதுரை கோபம்:

அவர் அந்தப் பக்கம் சென்றதும், மாதப் பத்திரிக்கையின் நிருபரை அழைத்த ராதாரவி, விஜயகாந்த் நல்ல மனுஷன்.இவரைப் போல ஒரு நல்ல இதயம் உள்ளவரை பார்க்க முடியாது. என்ன, மதுரைக்காரர்களுக்கே உரியமுன்கோபம் இவருக்கும் உண்டு. இதயத்தில் எதையும் வைத்துக் கொள்ளாமல் வாயை விட்டு விடுவார்,அதுதான் பிரச்சினையாகி விடுகிறது என்றார்.

எப்படியோ நடிகர் சங்க தேர்தல் இன்று ஒருவழியாய் முடிந்து இன்றே முடிவும் அறிவிக்கப்படவுள்ளது.

வாக்குப் பதிவு முடிந்த பின் நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. முடிவுகளைஅவரே அறிவிக்கிறார்.

தேர்தலையொட்டி நடிகர் சங்க வளாகம் உள்ள இந்தி பிரச்சார சபா சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil