»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் விஜயகாந்த் தலைமையிலான படக் குழுவினர் தங்களது பண்ணை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துபடப்பிடிப்பு நடத்தியதோடு, பல லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் திருடிச் சென்று விட்டதாக பரணீதரன்என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கோவை மாவட்டம் சடையபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரணீதரன். இவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ள மனுவில்,

எனது தந்தைக்குச் சொந்தமான தென்னை மரங்கள் அடங்கிய தோப்பு மற்றும் பண்ணை வீடு சடையபாளையத்தில்உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி, நாங்கள் ஊரில் இல்லாத போது, விஜயகாந்த், நடிகை சூசன் மற்றும் படப்பிடிப்புக்குழுவினர் எங்களது பண்ணை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அவர்கள் அங்கு நெறஞ்ச மனசுக்காரன் படப்பிடிப்பைநடத்தியுள்ளனர். பின்னர் விஜயகாந்த்தும், சூசனும் எங்கள் வீட்டிலேயே தங்கியுள்ளனர்.

லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை பண்ணைக்குள் கொண்டு சென்று பயன்படுத்தி அங்குள்ள செடிகளையும்,மரங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் படப்பிடிப்பு முடிந்து திரும்பியபோது, ரூ. 60,000 மதிப்புள்ளமோட்டார் பம்புசெட் உள்ளிட்டவற்றை திருடிச் சென்று விட்டனர்.

ஊர் திரும்பிய நாங்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக, கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலையத்தில்புகார் கொடுக்கச் சென்றோம். ஆனால் புகாரை வாங்க மறுத்த சப் இன்ஸ்பெக்டர் சிவராமன், விஜயகாந்த் பெரியநடிகர், அவர் மீதா பொய் புகார் சொல்கிறீர்கள் என்று கூறி புகாரை வாங்க மறுத்து விட்டார்.

இதையடுத்து நெறஞ்ச மனசுக்காரன் படத் தயாரிப்பு நிர்வாகியிடம் புகார் கொடுத்தும் பலனில்லை. இந் நிலையில்கோமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜன் என்னைக் கூப்பிட்டு மிரட்டி, அடித்தார்.

மேலும் வீட்டிலிருந்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டு என்னிடம் வழங்கப்பட்டதாக எழுதப்பட்ட ஒருதாளில் என்னை மிரட்டி கையெழுத்தையும் வாங்கினார்.

இதில் உயர் நீதிமன்றம் தலையிட வேண்டும். நான் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க காவல்நிலையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு பரணீதரன் தனது மனுவில் கூறியுள்ளார்.

இதனை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், கோமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்ஆகியோர் வரும் 8ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil