ஹார்ட் அட்டாக் வதந்தி...மேடையில் நக்கல் செய்த விக்ரம்...செம மாஸ் பேச்சிற்கு குவியும் லைக்ஸ்
சென்னை : டைரக்டர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஆக்ஷன், த்ரில்லர் படம் கோப்ரா. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரில் லலித் குமார் தயாரித்துள்ளார்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
Recommended Video
கடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் வெளியாக உள்ள படம் என்பதால் கோப்ரா படத்திற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் அதிகபட்சமாக 20 கெட்அப்களில் நடித்துள்ளார்.
டைட்டில் ரோலான கோப்ரா கேரக்டர் உள்ளிட்ட பல ரோல்களில் விக்ரம் இந்த படத்தில் நடித்துள்ளார். அவருடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ். இஃர்பான் பதான், ரோசன் மேத்தீவ், பத்மபிரியா, கனிகா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழில் முதல் படம்
கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் தமிழில் அறிமுகமாக உள்ள படம் இது. கேஜிஎஃப் இரண்டு பாகங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ஸ்ரீநிதி ஷெட்டி, கோப்ரா படத்தின் முலம் தமிழிலும் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

கோப்ரா ரிலீஸ் எப்போ
ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் கோப்ரா படம் ஆகஸ்ட் 11 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் முவிஸ் பெற்றுள்ளது. கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் டிவி பெற்றுள்ளது. டிஜிட்டல் உரிமத்தை சோனி லைவ் ஓடிடி தளம் பெற்றுள்ளது.

மாஸ் என்ட்ரி கொடுத்த விக்ரம்
இந்நிலையில் கோப்ரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விக்ரம், நேற்று தான் டிஸ்சார்ஜாகி வீடு திரும்பினார். இதனால் விக்ரம் இன்று கலந்து கொள்வாரா என ரசிகர்கள் குழப்பமடைந்திருந்த நிலையில், ரசிகர்களின் ஆரவாரத்துடன், அரங்கம் அதிர மாஸ் என்ட்ரி கொடுத்தார் விக்ரம்.

கோப்ரா பட வில்லன் இவர் தான்
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய விக்ரம், இந்த படத்தில் இர்ஃபான் பதான் வில்லன் கிடையாது. ரோசன் மாத்தீவ்ஸ் தான் வில்லன். இர்ஃபான் பதான் படத்திலும் ஆல்ரவுண்டர் தான் என சொல்லி சஸ்பென்சை உடைத்தார்.துருவ் விக்ரமிற்கும் மேடையில் நன்றி சொன்ன விக்ரம், அவரின் பாடல் தேர்வு மற்றும் பாடிய விதம் படத்திற்கு பெரிய பிளசாக அமைந்துள்ளது என்றார்.

வதந்தி பற்றி விக்ரமின் நக்கல் பேச்சு
தனது உடல் நிலை குறித்து பேசிய விக்ரம், சும்மா ஹர்ட்ல கை வச்சாக் குட ஹர்ட் அட்டாக்குன்னு சொல்லிருவாங்க. எனக்கு ஒன்றும் இல்லை. நான் நன்றாக உள்ளேன் . சிலர் கச்சா முச்சா என ஏதேதோ எழுதி இருந்தார்கள். நன்றாக இருந்தது. சிலர் thumb nail ல யாரோ ஒரு நோயாளியின் முகத்தில் எனது முகத்தை வைத்து நல்ல போட்டோஷாப் பண்ணி இருந்தார்கள். அதுவும் நன்றாக இருந்தது. எவ்வளவோ பார்த்துட்டோம். இதெல்லாம் ஒன்றும் இல்லை என ஜாலியாக பேசினார் விக்ரம். பொன்னியின் செல்வன் படம் பற்றி பேசிய விக்ரம், ஆதித்ய கரிகாலன் என்று சொன்னதுமே ஆடிட்டோரியத்தில் அப்படி சத்தம் ஆர்ப்பறித்தது.


Click it and Unblock the Notifications











