Don't Miss!
- News
50 ஆயிரம் அடி உயரத்தில்.. ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்குள் திடீரென கிளம்பிய புகை! அலறிய பயணிகள்.. வீடியோ!
- Automobiles
மீண்டும் டாடாவை முந்தி 2வது இடத்திற்கு வந்த ஹூண்டாய்!! கார்கள் விற்பனையில் பலத்த போட்டி!
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் ஆண்களுக்கு பாலியல் ஹார்மோன்கள் குறைவாக இருக்குனு அர்த்தமாம்... உஷார்!
- Sports
கேப்டனாக தினேஷ் கார்த்திக்கிற்கு முதல் வெற்றி.. பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரம்.. முழு விவரம்
- Finance
தங்க கடன் மட்டும் 1 லட்சம் கோடி.. திடீரென தங்க நகையை அடகு வைக்கும் மக்கள்.. ஏன்..?!
- Technology
OnePlus Nord 2T வாங்கலாமா? இல்ல Nothing Phone 1 போனுக்கு வெயிட் பண்ணலாமா? எது பெஸ்ட்?
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
விக்ரம் - ரஞ்சித் இணைவது ஒரு பீரியட் பான் இந்தியா 3D ஃபில்ம் -ஞானவேல் ராஜா
சென்னை: சார்ப்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் நடிகர் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
பா.ரஞ்சித்தின் மெட்ராஸ் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாதான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். அது தொடர்பாக அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறி இருக்கிறார்.
வருகிற ஜூலை 15-ஆம் தேதி முதல், இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. முதல் முறையாக ரஞ்சித் மற்றும் ஞானவேல் ராஜாவுடன் விக்ரம் பணிபுரிகிறார்.
அட்டகத்தி முதல் சார்பட்டா பரம்பரை வரை..பா.ரஞ்சித்தின் 10 ஆண்டுகள்

விக்ரமின் உழைப்பு
அனைத்து படங்களுக்கும் இயக்குநர்கள் எதிர்ப்பார்ப்பதை விட நான்கு மடங்கு தயாராகும் நடிகர் விக்ரம் இந்தப் படத்திற்காகவும் கிட்டத்தட்ட 6 மாதங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார். ரஞ்சித்தின் கனவிற்கு உயிர் கொடுக்கப் போகிறார். அவருடைய நடிப்புப் பசிக்கு தீனி போடுவது கஷ்டம் என்று ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித்தின் டச்
சார்ப்பட்டா பரம்பரை, மெட்ராஸ் போன்ற திரைப்படங்களில் இருந்த அளவிற்கு இதிலும் அவரது அரசியல் பார்வை இருக்கும். சார்ப்பட்டா படம் போல் இதுவும் ஜென்யூனாக இருக்கும். ரஞ்சித் போன்ற இயக்குநர்களுடன் அவர்களது ஆரம்ப காலத்தில் பணிபுரிந்தது எனக்குக் கிடைத்த பாக்யமாக கருதுகிறேன் என்று ஞானவேல் கூறியுள்ளார்.

GV பிரகாஷ் இசை
GV பிரகாஷ் முதல் முறையாக பா.ரஞ்சித்துடன் கூட்டணி அமைக்கிறார். ரஞ்சித்தின் படங்களில் கவித்துவமான பாடல்கள் இருக்கும். ரசிகர்களின் அந்த எதிர்ப்பார்ப்பை GV பூர்த்தி செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஞானவேல் ராஜாதான் GV பிரகாஷை டார்லிங் படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீரியாடிக் 3D பான் இந்தியப் படம்
ஒரு பீரியட் மற்றும் பான் இந்தியா ஃபிலிமாக உருவாகவுள்ள இந்தப் படம் 3D தொழில் நுட்பத்திலும் படமாக்கப்படவுள்ளது. படம் பார்க்க ஆரம்பித்தவுடன் அது உங்களை புதிய உலகிற்கு கொண்டு சென்று அழ வைத்து, சிரிக்க வைத்து, பிரமிக்க வைத்து மீண்டும் வெளியே வரும்போது புதிய உலகிற்கு வருவது போன்ற ஒரு அனுபவத்தை தரும் என்று ஞானவேல் ராஜா அந்தப் படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.