twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன் புக் எடுத்து வந்த என்னை எங்க தாத்தா கண்டபடி திட்டினாரு.. விக்ரம் பிரபு பேச்சு!

    |

    சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் கந்தமாறன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் பிரபு தனது தாத்தா சிவாஜி பற்றியும் சிறுவயதிலேயே தனக்கு பொன்னியின் செல்வன் புத்தகத்துடன் இருந்த தொடர்பு குறித்தும் பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    Recommended Video

    நடிகர் Vikram-க்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! என்ன ஆனது ? *Kollywood | Filmibeat Tamil

    பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவாக இல்லாத நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் லைவ் மியூசிக் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

    டீசரை பற்றிய விஷயங்களையும் படத்தை பற்றிய விஷயங்களையும் பேசிய சில படக்குழுவினரும் தீவிரமாக பேசாத நிலையில், விக்ரம் பிரபுவின் பேச்சு சற்றே ரசிகர்களுக்கு ஆறுதலை தந்தது.

    எம்ஜிஆரும், ரஜினிகாந்தும் பொன்னியின் செல்வனும்..நாவலின் கேரக்டர் பெயர்களை அடுக்கி அசத்திய ரஜினிஎம்ஜிஆரும், ரஜினிகாந்தும் பொன்னியின் செல்வனும்..நாவலின் கேரக்டர் பெயர்களை அடுக்கி அசத்திய ரஜினி

    எம்ஜிஆர் எடுக்க நினைத்தார்

    எம்ஜிஆர் எடுக்க நினைத்தார்

    பொன்னியின் செல்வன் படத்தை எம்ஜிஆர் எடுக்க நினைத்தார். ஆனால், அவரால் முடியவில்லை. எங்களுக்கு விட்டுச் சென்றார் என இயக்குநர் மணிரத்னம் பேசினார். படத்தில் நடித்த கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்டோர்களும் பொன்னியின் செல்வன் படம் பற்றி பெரிதளவில் எதையும் வாயே திறக்கவில்லை. ஒருவேளை அதுவும் இயக்குநர் மணிரத்னத்தின் ஆர்டராக கூட இருக்கும் என்கின்றனர்.

    ராஜராஜ சோழன்

    ராஜராஜ சோழன்

    எம்ஜிஆர் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவில்லை என்றாலும், ராஜராஜ சோழனை தமிழ் சினிமா மூலம் உலகத் தமிழர்களுக்கு காட்டியவர் சிவாஜி தான். ஏபி நாகராஜன் இயக்கத்தில் 1973ம் ஆண்டு வெளியான ராஜராஜ சோழன் படத்தில் சிவாஜியின் தோற்றம் அவ்வளவு கம்பீரமாக இருக்கும். அந்த படத்தில் நடிகர் சிவகுமார் ராஜேந்திர சோழனாக நடித்திருப்பார். இந்த பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி வந்தியத்தேவனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    விக்ரம் பிரபுவுக்கு என்ன ரோல்

    விக்ரம் பிரபுவுக்கு என்ன ரோல்

    பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு என்ன ரோல் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், கந்தமாறன் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்சு பலரையும் கவர்ந்துள்ளது.

    தாத்தா திட்டினாரு

    தாத்தா திட்டினாரு

    தாத்தா சிவாஜி என்கிட்ட நான் சின்ன பையனா இருக்கும் போது, பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்துட்டு வரச் சொன்னாரு, நான் போயிட்டு கஷ்டப்பட்டு தமிழில் பொன்னியின் செல்வன் புத்தகத்தின் தலைப்பை படித்து விட்டு எடுத்து வந்து கொடுத்தேன். ஆனால், அதற்கு ஒரு புத்தகம் தான் இருக்கு.. பொன்னியின் செல்வன் மொத்தம் 5 புத்தகம் இருக்குடா மடையா.. அத்தனையையும் எடுத்துட்டு வான்னு திட்டினாரு என்கிற சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டார்.

    பிரபு வரல

    பிரபு வரல

    பொன்னியின் செல்வன் படத்தில் மகாமந்திரியாக நடித்துள்ள நடிகர் பிரபுவும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. நடிகர் பிரபு கலந்து கொண்டிருந்தால், மேலும், பல தகவல்களை பகிர்ந்து இருப்பார் என ரசிகர்கள் தங்களின் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் டீசரில் பிரபு இருக்கும் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது.

    English summary
    Vikram Prabhu shares a unknown story about Sivaji and Ponniyin Selvan book bonding at Ponniyin Selvan teaser launch event makes fans happy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X