Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சியான் 61 பூஜையில் விபூதியை தவிர்த்தாரா விக்ரம்...தீயாய் பரவும் வீடியோ
சென்னை : தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராக வாழ்க்கையை துவங்கி படிப்படியாக முன்னேறி டாப் ஹீரோ ஆனவர் விக்ரம். தனது படங்களுக்கு உடல் எடையை அதிகரிப்பது, குறைப்பது என பல மெனக்கெடல்களை அசால்டாக செய்யக் குடியவர் விக்ரம்.
கடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்த படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. சமீபத்தில் மகான் படம் ஓடிடி.,யில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த நிலையில், அடுத்ததாக விக்ரமின் பல படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகின்றன.
கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய இரு படங்களும் இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. இவை இரண்டுமே ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன.
சியான் 61 படத்துக்கு பூஜை போட்டாச்சு.. பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்.. டிரெண்டாகும் பிக்ஸ்!

கோப்ராவில் 11 கெட்அப்களில் விக்ரம்
இதில் கோப்ரா படத்தில் அதிகபட்சமாக விக்ரம் 20 கெட்அப்களில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் 11 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் விக்ரம், தனது ஹார்ட் அட்டாக் என வதந்தி கிளப்பியவர்கள், மீம்ஸ் போட்டவர்களை கலாய்த்து பேசியது அனைவரையும் பெரிதும் கவர்ந்தது.

பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலன்
கோப்ரா படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் படத்துள்ள படம் பொன்னியின் செல்வன். செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்தில் ஆதித்ய கரிகாலன் ரோலில் விக்ரம் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்திற்காக 5 மொழிகளில் விக்ரம் டப்பிங் பேசிய மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.

கேஜிஎஃபி.,ல் படமாகும் சியான் 61
இதைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார் இந்த படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது. சியான் 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பல காட்சிகள் கேஜிஎஃப்.,ல் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்திற்கு மைதானம் என பெயரிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

விபூதியை தவிர்த்த விக்ரம்
சியான் 61 பட பூஜையின் போது புரோகிதர், பா.ரஞ்சித் உள்ளிட்ட அனைவருக்கும் விபூதி வைத்து விட்டுள்ளார். அப்போது விக்ரமிற்கு அவர் பூச வந்த போது, அவர் அதை வேண்டாம் என அடக்கமாக சொல்லி தவிர்த்து விட்டார். ஜி.வி.பிரகாஷும் வேண்டாம் என தவிர்த்துள்ளார். அதே சமயம், பக்கத்தில் இருந்த சாண்டி மாஸ்டர், பரவாயில்லை எனக்கு வைத்து விடுங்கள் என கேட்டு வாங்கி உள்ளார்.

விடாமல் துரத்தும் பிரச்சனைகள்
விக்ரம் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதால் தான் விபூதியை தவிர்த்ததாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் ரோலில் நடித்த விக்ரமின் நாமம் போட்ட போஸ்டரால் சர்ச்சையாகி உள்ளது. சோழர்களின் வரலாறு மறைக்கப்பட்டதாக மணிரத்னம் மற்றும் விக்ரமிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் இந்த விவகாரமும் சேர்ந்துள்ளது.