Don't Miss!
- News
"காசை வச்சிட்டு வண்டியை எடு பய்யா".. திருப்பூரில் தமிழரை மடக்கி.. வம்பு செய்த வட இந்தியர்கள்.. ஷாக்
- Technology
இதை விட கம்மி விலையில் மோட்டோரோலா 5G போன்கள் கிடைக்காது: ஆபர் போட்டு அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- Sports
விராட் கோலிக்கு இன்னும் அந்த குறை இருக்கு.. ஆஸி. டெஸ்டில் தடுமாற வாய்ப்பு.. இர்பான் பதான் எச்சரிக்கை
- Finance
அதானி பங்களாதேஷ் விவகாரம்.. பிரதமர் மோடி அரசு விலகியதா.. உண்மை நிலவரம் என்ன?
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
“என்னோட கெட்டப்களை நம்பி கோப்ரா பார்க்க வராதீங்க”: விக்ரம் சொன்ன அப்டேட்டால் ரசிகர்கள் குழப்பம்
சென்னை: விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படம், வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
முன்னணி நடிகரான விக்ரம், கடந்த சில தினங்களுக்கு முன்னரே டிவீட்டர் தளத்தில் இணைந்தார்.
இந்நிலையில், 'கோப்ரா' படம் குறித்து ட்வீட்டர் ஸ்பேசில் கலந்துரையாடினார் நடிகர் விக்ரம்.
கிஸ்வால் அருகே விக்கி நயன் கொடுத்த போஸ்.. இதே வேலையா போச்சு.. கடுப்பில் கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!

கோலிவுட்டின் தரமான நடிகர்
வித்தியாசமான நடிப்புக்கும், புதுமையான முயற்சிகளுக்கும் கொஞ்சமும் தயங்காதவர் நடிகர் விக்ரம். கமலுக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு நடிகராக இயக்குநர்கள் கை காட்டுவது விக்ரமை தான். இதற்கு உதாரணமாக காசி, பிதாமகன், ஐ போன்ற படங்களைக் கூறலாம். ஆரம்பத்தில் சரியான வாய்ப்புகள் கிடைக்காத விக்ரம், சேது படத்திற்குப் பின்னர் தாறுமாறாக சம்பவம் செய்தார். அவருக்காக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கோப்ரா
'ஐ படத்திற்குப் பின்னர் விக்ரம் நடித்த திரைப்படங்கள் அவருக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. இறுதியாக விக்ரமின் 'மகான்' திரைப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றாலும், அது நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியாகிருந்தது. இந்நிலையில் விக்ரம் நடிப்பில் வரும் 31ம் தேதி வெளியாகவுள்ள 'கோப்ரா' படம், எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பல மாதங்களாக படப்பிடிப்பில் இருந்த கோப்ரா, வெளியாகுமா என்றெல்லாம் கூட கேள்விகள் எழுந்தன.

மிரட்டும் கோப்ரா கூட்டணி
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என கவனம் ஈர்த்த அஜய் ஞானமுத்து, 'கோப்ரா' படத்தை இயக்கியுள்ளார். முக்கியமாக ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளது பெரிய பலமாக அமைந்துள்ளது. விக்ரமுடன், இர்ஃபான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் 'கோப்ரா'வில் நடித்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல், விக்ரம் பலவிதமான கெட்டப்களில் நடித்துள்ளார்.

அதுக்காக மட்டும் வராதீங்க
இந்நிலையில், 'கோப்ரா' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியாக, விக்ரம், இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோர், டிவிட்டர் ஸ்பேசில் ரசிகர்களுடன் கலந்துரையாடினர். அப்போது பேசிய விக்ரம், "நான் பல கெட்டப்களில் நடித்துள்ளதால், அதை மட்டும் நம்பி படம் பார்க்க வர வேண்டாம். இது அதை மட்டும் சார்ந்து எடுக்கப்படவில்லை என்றும், கோப்ரா எமோஷனல் ட்ராமாவாக இருக்கும், அது அனைத்து ரசிகர்களையும் கவரும்" எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து, ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.