இது செம மேட்டரா இருக்கே?...சியான் 62 பற்றி விக்ரம் தந்த ஹாட் அப்டேட்

சென்னை : விக்ரம் தற்போது நடித்து முடித்துள்ள 3 படங்களும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 ம் தேதியும், அஜய் ஞானமுத்து இயக்கிய கோப்ரா ஆகஸ்ட் 31ம் தேதியும் ரிலீஸ் செய்யப்பட உள்ளன.

இந்த இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள நட்சத்திரம் நகர்கிறது படமும் ஆகஸ்ட் 31 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது.

கைவசம் இருந்த படங்களில் எல்லாம் நடித்து முடித்து விட்ட விக்ரம் புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். தனது அடுத்த படமான சியான் 61 படம், பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் துவங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

ட்விட்டரில் இணைந்த விக்ரம்

ட்விட்டரில் இணைந்த விக்ரம்

இந்த சமயத்தில் அடுத்து ரிலீசாக உள்ள விக்ரமின் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படங்களை ரசிகர்களை இப்போதே வரவேற்க தயாராகி விட்டனர். இதனால் தனது படங்களின் ப்ரொமோஷன் காரணமாக சமீபத்தில் விக்ரம் ட்விட்டரில் இணந்தார். 10 ஆண்டுகள் தாமதமாக ட்விட்டரில் இணைந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு அசத்தினார்.

வருகிறான் சோழன்

வருகிறான் சோழன்

இதைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் செகண்ட் சிங்கிளாக சோழா சோழா பாடல் இன்று மாலை வெளியிடப் போகிற போஸ்டரை பகிர்ந்தார். இதைத் தொடர்ந்து முதல் முறையாக நேற்று ட்விட்டர் ஸ்பேசில் இணைந்து ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

சியான் 62 அப்டேட் தந்த விக்ரம்

சியான் 62 அப்டேட் தந்த விக்ரம்

ஜாலியாக பல விஷயங்களை பகிர்ந்த விக்ரம், கோப்ரா படம் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்தார். மேலும் கோப்ரா படத்திற்கு பிறகு அஜய் ஞானமுத்துவுடன் இணைந்து மற்றொரு படத்தில் பணியாற்ற உள்ளதாக சியான் 62 பட அப்டேட் தந்தார் விக்ரம். பா.ரஞ்சித் உடனான சியான் 61 முடிந்த பிறகு 2023 ல் சியான் 62 வேலைகள் துவங்கப்படும் என்றார்.

எல்லாமே முடிவாகிடுச்சா

எல்லாமே முடிவாகிடுச்சா

இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பதாகவும். கதையை ஃபைனல் செய்யும் வேலைகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இது தனித்துவமான கதை. இந்த படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த படம் என்னாச்சு?

அந்த படம் என்னாச்சு?

கோப்ரா படம் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ள நிலையில், சியான் 62 படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என தெரிகிறது. கோப்ரா படத்திற்கு பிறகு டைரக்டர் மாரி செல்வராஜ் இயக்கும் விளையாட்டை மையப்படுத்திய கதையில் தான் நடிக்க போகிறார் என சொல்லப்பட்டு வந்தது.

எல்லாருமே பிசியாகிட்டாங்களே

எல்லாருமே பிசியாகிட்டாங்களே

ஆனால் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்க போய் விட்டார். விக்ரமும் பா.ரஞ்சித் படத்தில் நடிக்க கமிட்டாகி விட்டார். தற்போது அஜய் ஞானமுத்துவுடன் மீண்டும் இணைய உள்ளதாக விக்ரமே அப்டேட் வெளியிட்டுள்ளார். இதனால் மாரி செல்வராஜ் உடனான படம் என்ன ஆயிற்று? அது நடக்குமா - நடக்காதா? என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஒரு படத்தில் நடிப்பதாகவும் சொல்லப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X