Cannes 2022 திரைப்பட விழாவில் விக்ரம் டிரைலர்...கமலோட பிளான் இது தானா?
சென்னை : ஃபிரான்சில் நடக்கும் Cannes சர்வதேச திரைப்பட விழாவில் கமலின் டிரைலர் படம் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ஃபிரான்ஸ் சென்றுள்ள கமல், செம பிளானோடு சென்றுள்ளாராம்.
2022ம் ஆண்டிற்கான சர்வதேச திரைப்பட விழா ஃபிரான்ஸின் கான்ஸ் நகரில் மே 17 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. மே 17 ம் தேதி முதல் மே 28 ம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் சர்வதேச மற்றும் இந்திய திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கான்ஸ் திரைப்பட விழாவில் கமல்
பாலிவுட் நட்சத்திரங்களைத் தொடர்ந்து தமிழ் திரையுலகை சேர்ந்த கமல், பா.ரஞ்சித் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். கமல், ஏ.ஆர்.ரஹ்மான், மாதவன், தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். நேற்று கலந்து கொண்ட கமல் உள்ளிட்டோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

கான்ஸ் விழாவில் விக்ரம் டிரைலர்
Cannes திரைப்பட விழாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் டிரைலர் திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற விழாவில் விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியிடப்பட்டது. ஆனால் விக்ரம் டிரைலரை முதலில் கான்ஸ் திரைப்பட விழாவில் தான் வெளியிட திட்டமிடப்பட்டது. பிறகு அந்த பிளானை மாற்றி முன்கூட்டியே சென்னையில் பிரம்மாண்ட விழாவை நடத்தி வெளியிட்டனர்.
Recommended Video

சர்வதேச ரசிகர்களை ஈர்க்குமா
ஆனால் எந்த தேதியில் விக்ரம் டிரைலர் திரையிடப்படும் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இருந்தாலும் விக்ரம் டிரைலர் சர்வதேச சினிமா ரசிகர்களை கவர்ந்து, அனைவரையும் இதை பற்றி பேச வைக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மே 15 ம் தேதி வெளியிடப்பட்ட விக்ரம் டிரைலர் இரண்டு நாட்களில் யூட்யூப்பில் 22 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. 24 மணி நேரத்தில் 25 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. இதனால் சர்வதேச ரசிகர்களின் கவனத்தையும் விக்ரம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமலோட பிளான் இது தானா
Cannes சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள ஃபிரான்ஸ் சென்றுள்ள கமல், அங்கு 12 நாட்கள் தங்கி, ஓய்வெடுக்க போகிறாராம். விக்ரம் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதால் சர்வதேச திரைப்பட விழாவுடன், ஃபிரான்சில் பொழுதை செலவிட போகிறாராம் கமல். விக்ரம் ரிலீஸ் சமயத்திலேயே அவர் சென்னை திரும்ப உள்ளதாகவும், அதற்கு பிறகு சினிமா, அரசியல் இரண்டிலும் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











