விளங்குமா.. எவ்ளோ பெரிய கொட்டாவி.. விக்ரமனை பங்கமாக கலாய்த்த அசீம் ஆர்மி.. எதெல்லாம் நோட் பண்றாங்க?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரம் ஓடுவதால் தினசரி எபிசோடை கூட பலர் பார்க்காமல் விட்டு விடுகின்றனர்.

ஆனால், சில தீவிர ரசிகர்கள் கொட்டாவி விடுவது முதல் ஒன் பாத்ரூம் போவது வரை அனைத்தையுமே நோட் பண்ணி ட்ரோல் செய்து வருகின்றனர்.

விக்ரமன் எவ்வளவு பெரிய தூங்கு மூஞ்சி என்றும் எப்படி கொட்டாவி விடுறாரு பாருங்க என ஒரு வீடியோ க்ளிப்பையே சோஷியல் மீடியாவில் அசீம் ஆர்மியினர் டிரெண்ட் செய்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

ரசிகர்கள் அதிகம்

ரசிகர்கள் அதிகம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6ன் டைட்டிலை தட்டிச் செல்வார் விக்ரமன் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசனின் ஆஸ்த்தான போட்டியாளராக மாறி உள்ள விக்ரமன் பல வாரங்கள் அசீம் உடன் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், அதிக வாக்குகளுடன் முதல் நபராக சேவ் செய்யப்பட்டிருக்கிறார். ஷிவின், ஏடிகே மற்றும் அமுதவாணன் உள்ளிட்ட போட்டியாளர்கள் விக்ரமன் விளையாட்டை பாராட்டி வருகின்றனர்.

அசீம் விக்ரமன் சண்டை

அசீம் விக்ரமன் சண்டை

பிக் பாஸ் வீட்டில் அதிக பாராட்டுக்களை அள்ளி வரும் விக்ரமனுக்கும் அசீமுக்கும் இடையே பெரும் சண்டை வெடித்து வருகிறது. விக்ரமன் மற்றும் அசீம் இருவரும் அரசியல் பின்புலம் கொண்டவர்கள் என்பதால் தான் இருவருக்கும் செட் ஆகாமல் முட்டிக் கொள்கின்றனர் எனக் கூறப்படுகிறது. வீட்டிற்குள் இவர்கள் இருவரும் சண்டை போடுகிறார்களோ இல்லையோ, வெளியே இவர்களது ரசிகர்கள் கிளவுன் அசீம் என்றும் பூமர் விக்ரமன் என்றும் வெறித்தனமாக சண்டை போட்டு வருகின்றனர்.

சோம்பேறி

சோம்பேறி

அசீம் ஆர்மியினர் விக்ரமன் மீது அடிக்கடி வைக்கும் குற்றச்சாட்டுகளில் மிகவும் முக்கியமான குற்றச்சாட்டு என்றால் அது அவர் ஒரு தூங்குமூஞ்சி என்றும் சோம்பேறி என்பதும் தான். எந்த வேலையும் பெருசா செய்யாமல் சோபாவில் உட்கார்ந்து கொண்டு கொட்டாவி விட்டு தூங்கிவிடுவார் என கலாய்த்துள்ளனர்.

எவ்ளோ பெரிய கொட்டாவி

எவ்ளோ பெரிய கொட்டாவி

சமீபத்தில் ஆஸ்கர் விருது பெற்ற பாராசைட் படம் பற்றி பேசும் போது கூட நிறைய கொட்டாவி விட்டுக் கொண்டே விக்ரமன் பேசியிருப்பார். இந்நிலையில், இந்த பிக் பாஸ் வீட்டுக்கு வந்ததில் இருந்தே அவர் விட்ட மிகப்பெரிய கொட்டாவி இதுதான் என அசிம் ஆர்மியினர் கேப்சர் பண்ண வீடியோவை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

பூமர்மேன்

லாங்கஸ்ட் கொட்டாவி விட்ட பூமர்மேன் விக்ரமன் என பிக் பாஸ் ரசிகர் போட்ட இந்த வீடியோவை அசீம் ஆர்மியினர் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். நீங்க எல்லாம் கொட்டாவி விடவே மாட்டீங்களா என்றும் திருடி தின்பது தானே அசீமின் வேலை என விக்ரமன் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

டைட்டிலுக்கு தகுதியில்லை

டைட்டிலுக்கு தகுதியில்லை

விக்ரமனை சினேகன் போல ஆக்க கமல் ட்ரை பண்றாரு என்றும் ஆரி அர்ஜுனன் அளவுக்கு எல்லாம் விக்ரமன் வொர்த் கிடையாது. இந்த சீசன் டைட்டிலை பெறும் தகுதி விக்ரமனுக்கு கொஞ்சம் கூட இல்லை என அசீம் ஆர்மியினர் ட்ரோல் செய்து வருகின்றனர். என்ன வேணா நடக்கட்டும் விக்ரமன் யாருக்கும் கெடுதல் செய்யல அவர் தான் டைட்டிலை தட்டித் தூக்கப்போகிறார் பார்த்துக் கொண்டே கதறுங்க என விக்ரமன் ரசிகர்கள் கமெண்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X