ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.. அப்பவே அப்படி.. "பான் இந்தியா படம்! விக்ரமனின் ’சூர்யவம்சம்’ 25 வது ஆண்டு

தமிழில் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார்-தேவயானி நடிப்பில் சூர்யவம்சம் படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது. நம்பிக்கை ஊட்டும் படமாக சூர்யவம்சம் வெளிவந்தது. பின்னர் பல மொழிகளில் வெளியானது.

சென்னை: சூர்யவம்சம் படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. படத்தின் கதை, பாடல்கள், காமெடி காட்சிகளுக்காக மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

பான் இந்தியா படமாக சூர்யவம்சம் பின்னர் பல மொழிகளில் தயாரிக்கப்பட்டது, இந்தியில் அமிதாப்பச்சன் நடித்தார்.

சூர்யவம்சம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வலுவான கதைக்களம் தமிழ் சினிமாவின் அடையாளம்

வலுவான கதைக்களம் தமிழ் சினிமாவின் அடையாளம்

தமிழ் திரையுலகம் வலுவான திரைக்கதைக்கொண்ட படங்களை படைப்பதில் சிறப்பான ஒன்று என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளது. வலுவான கதைகளை நம்பி படமெடுத்த இயக்குநர்கள் பலர் உண்டு. அதில் வெற்றிகரமானவர் இயக்குநர் விக்ரமன் எனலாம். குடும்ப உறவுகளை நுணுக்கமாக எடுத்து வெற்றிக்கண்டவர் விக்ரமன்.

திரைக்கதை மன்னன் விக்ரமன்

திரைக்கதை மன்னன் விக்ரமன்

விக்ரமன் படத்தில் ஆஸ்தான இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார். இவரது படத்தில் பாசத்தை மையமாக வைத்து கதை பின்னப்பட்டிருக்கும். அதிலும் காட்சிக்கு இடையே வரும் ஹம்மிங் மிகப்பிரபலம். மீம்ஸ் கிரியேட்டர்களுக்காகவே இசையமைக்கப்பட்டதுபோல் அது பிரபலமானது, அதிரடி ஆக்‌ஷன் ஹீரோ விஜயகாந்தே இந்த ஹம்மிங்குக்கு கட்டுப்பட்டு அமைதியாக நடித்த படமும் உண்டு.

குடும்பக்காட்சிகளுக்கு பேர்போன படங்கள்

குடும்பக்காட்சிகளுக்கு பேர்போன படங்கள்

விக்ரமன் படங்களில் வரும் காட்சிகள் அவரவர் குடும்பங்களில் நடப்பது போல் அமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உணர்வுப்பூரமாக ரசிப்பதுண்டு. சூர்யவம்சமும் அப்படி ஒரு படம் தான். இப்படம் 1997 ஆம் ஆண்டு வெளியான போது மிகுந்த வரவேற்பை பெற்றது. காரணம் கதை, பாடல், மணிவண்ணன், சுந்தர்ராஜன் காமெடி, நம்பிக்கை ஊட்டும் கதைக்களன் என பலவற்றை சொல்லலாம்.

சூர்யவம்சம் 25 வது ஆண்டு

சூர்யவம்சம் 25 வது ஆண்டு

ஊர் பெரியவரின் இளைய மகனாக வரும் சரத்குமாரும், மணிவண்ணனும் சேர்ந்து அடிக்கும் லூட்டியுடன் படம் ஆரம்பிக்கும். குடும்ப புகைப்படத்தில் கூட மகனை நிற்க அனுமதிக்காத அப்பா சரத்குமார். காரணம் மணிவண்ணனுக்கும், சரத்குமாருக்கும் மட்டுமே தெரியும். உயிருகு உயிராக காதலிக்கும் அத்தை மகள் வளர்ந்தப்பின் படித்த காரணத்தால் படிக்காத சரத்குமாரை வெறுப்பதும் அதை கதையை மாற்றி சரத்குமார் வெறுப்பதுபோல் நடிக்க கேட்டுக்கொள்வதால் தந்தை கோபத்தில் மகன் சரத்குமாரை வெறுத்திருப்பார்.

அத்தை மகளால் அவமானம்

அத்தை மகளால் அவமானம்

அத்தைமகளுடன் ரோசாப்பு சின்ன ரோசாப்பூ பாடலும், அதே அத்தைப்பெண் பணக்கார இளைஞரை கட்டியப்பின் அவமானப்படுத்துவதும், ஊருக்கு விருந்தினராக வரும் தேவயானி இதை கவனித்து சரத்குமாருக்கு ஆதரவாக இருக்க பின்னர் காதலாக மாறி சரத்குமாரிடம் கேட்க அவர் மறுக்க மீண்டும் ரோசாப்பு சின்ன ரோசாப்பு பாடல் பெண் குரலில் தேவயானி பாட காதல் மலரும்.

அவமானப்பட்டு வெளியேறும் காதல் ஜோடி

அவமானப்பட்டு வெளியேறும் காதல் ஜோடி

ஐஏஎஸ் கனவில் மிதக்கும் தேவயானி, சரத்குமாரை மணக்க வாழ்த்த மனமில்லாத அப்பா சரத்குமார் இவன் ஒரு உருப்படாதவன் அவனை கட்டிகிட்ட நீ ஒரு உருப்படாதவல் ரெண்டு பேரும் சேர்ந்து உருப்படாம போகப்போறீங்க என சாபம் கொடுக்க அவமானத்துடன் வெளியேறும் சரத் தேவயானி ஜோடி சவாலை சந்தித்து முன்னேறுவார்கள். அதை அழகாக காட்சிப்படுத்தி நகைச்சுவையுடன் உணர்வுபூர்வமாக சொல்லியிருப்பார்கள்.

சவாலே சமாளி நட்சத்திர ஜன்னலில் மோடிவேஷனல் சாங்

சவாலே சமாளி நட்சத்திர ஜன்னலில் மோடிவேஷனல் சாங்

படத்தில் பழைய பேருந்தை வாங்கி ஓட்டும் சரத்குமார் வாழ்க்கையில் முன்னேறுவதும், குழந்தை பெற்றப்பின் சிவில் தேர்வு எழுதச் செல்லும் தேவயானி ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறுவதையும் நட்சத்திர ஜன்னலில் என்கிற ஒரே பாடலில் சொல்லியிருப்பார்கள். பாடல் முடிவதற்குள் சரத்குமார் பெரிய பணக்காரர் ஆகியிருப்பார், தேவயானி ஐஏஎஸ் ஆகியிருப்பார். பேரன் என்று தெரியாமலே பேரனுடன் தாத்தா சரத்குமார் ஒன்றிபோயிருப்பார்.

Recommended Video

Annamalai | 90's Kids மனதை விட்டு நீங்கா படம், Rajinikanth | Kollywood | Filmibeat Tamil
எதிலும் குறையில்லாத சூர்யவம்சம்

எதிலும் குறையில்லாத சூர்யவம்சம்

படத்தின் அத்தனை அம்சங்களும் குறையே சொல்ல முடியாத அளவுக்கு இருந்ததால் ரசிகர்கள் படத்தை கொண்டாடினர். தமிழ் சினிமாவில் இது ஒரு மைல் கல் படமாக பேசப்படுகிறது. சரத்குமாருக்கும் இது ஒரு மைல்ஸ்டோன் படமாகும். நகைச்சுவை பாடல் காட்சிக்காக படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X