»   »  மீண்டும் பிஸியாகிட்டார் விமல்... இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க?

மீண்டும் பிஸியாகிட்டார் விமல்... இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க?

Posted By:
Subscribe to Oneindia Tamil
பாவம்ய்யா ஜூலி!-வீடியோ

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்திருந்த 'மன்னர் வகையறா' படம் வெளியானது. கலகலப்பான பொழுபோக்குப் படமாக அமைந்த மன்னர் வகையறா இப்போது வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

அதுமட்டுமல்ல ஒரு படத்தின் ஆயுட்காலம் முதல் வாரத்துடன் முடிந்துவிடுகிற இந்த கடினமான சூழலில் இப்போதும் சுமார் 50 தியேட்டர்களில் 'மன்னர் வகையறா' இன்னும் ஓடிக்கொண்டு இருப்பதே பெரிய விஷயமல்லவா.... இதனால் ஏக மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் இருக்கிறார் விமல்

Vimal signs 5 new movies

"இந்தப்படம் நிச்சயம் எனக்கு வெற்றிப்படமாக அமையும், அதன்பின் தான் புதிய படங்களை ஒப்புக்கொள்வேன்" என்று சொல்லி இந்தப்படத்திற்கு தனது முழு உழைப்பயும் தந்து காத்திருந்தார் விமல்... அவரது காத்திருப்பு வீண்போகவில்லை..

Vimal signs 5 new movies

'மன்னர் வகையறா' வெற்றியைத் தொடர்ந்து விமல் 5 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.. 'வெற்றிவேல்' இயக்குநர் வசந்தமணி, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அசோக், குறும்பட இயக்குநர் விஜய் உட்பட இன்னும் இரண்டு இயக்குநர்களின் படங்களில் நடிக்கவுள்ளார்.

Vimal signs 5 new movies

இதுதவிர சற்குணம் இயக்கத்தில் 'K2' படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் விமல், வரலட்சுமி ஜோடியாக நடித்துவரும் 'கன்னிராசி' படம் வரும் மார்ச் மாதம் ரிலீஸாக இருக்கிறது. ஆக இந்த வருடம் அடுத்தடுத்து விமலின் படங்கள் வெளியாக இருக்கின்றன.

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் விமல்..?

Vimal signs 5 new movies
English summary
After the success of Mannar Vagaiyara actor Vimal has signed 5 new movies

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil