»   »  நான் விபச்சாரம் செய்யவில்லை: வினிதா

நான் விபச்சாரம் செய்யவில்லை: வினிதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமா ஆசை காட்டி தன்னை விபச்சார வழக்கில் சிக்க வைத்து விட்டதாக எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை வினிதாசாட்சியம் அளித்தார்.

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக வினிதா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரதுதம்பி சங்கர், தாயார் லட்சுமி உள்ளிட்ட 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் நீதிபதி பூதநாதன் முன்னிலையில் வினிதா நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போதுஅவர் கூறியதாவது:

கடந்த 13-08-2003ம் தேதி இரவு 7 மணிக்கு என் வீட்டுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியவர், நான்ஒரு தயாரிப்பாளர். புதுப்படம் தொடர்பாக உங்களிடம் பேசவேண்டும். இன்னொரு தயாரிப்பாளர்பாரிமுனையில் காத்திருக்கிறார். நான் தி.நகர் உஸ்மான் சாலையில் இருக்கிறேன், நீங்கள் வாருங்கள் என்றுகூறினார்.

நான் எனது தம்பி, தாயார் ஆகியோருடன் அங்கு சென்றேன். அங்கு காத்திருந்தவரை தயாரிப்பாளர் என்றுநினைத்து காரில் ஏற்றிக் கொண்டு, பாரிமுனைக்குப் போகச் சொன்னேன். ஆனால் அவர் பாரிமுனைக்குப்போகவிடாமல், விபச்சார தடுப்பு அலுவலகத்துக்கு முன்பு நிறுத்தச் சொன்னார்.

அப்போதுதான் தெரிந்தது அவர் விபச்சார தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் தினகரன் என்று. வெற்றுபேப்பர்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர்.

என் உறவினர்களிடமோ, வழக்கறிஞர்களிடமோ பேசஅனுமதிக்கவில்லை. திட்டமிட்டு என்னை விபச்சார வழக்கில் சிக்க வைத்துள்ளனர். இது ஜோடிக்கப்பட்டவழக்காகும் என்றார். சாட்சியம் கூறும்போது வினிதா இடையிடையே கண்கலங்கினார்.

பின்னர் அரசு தரப்பு வழக்கறிஞர் கந்தசாமியும், வினிதாவின் வழக்கறிஞர் காஜா மொய்தீனும் வாதிட்டனர்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 2ம் தேதி (நாளை) மாலை 3 மணிக்கு தீர்ப்பளிப்பதாகக் கூறினார்.

பாபிலோனாவும் ஆஜர்:

தனது கணவர் அர்ஜூன்தாஸ் தன்னை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டதாகவும், அவரிடம் இருந்துவிவாகரத்து பெற்றுத் தர வேண்டும் என்றும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நடிகைபாபிலோனா ஆஜாரானார்.

ஆனால் அர்ஜூன்தாஸ் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு அனுப்ப்பட்ட நோட்டீஸ் அவரிடம்தரப்படவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து புது நோட்டீஸை அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி புஷ்பாதுரைசாமி வழக்கை வரும் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

சுகன்யாவும் ஆஜர்:

தன் கணவர் ஸ்ரீதர் மீது தொடர்ந்த விவாகரத்து வழக்கு தொடர்பான செய்திகளை பத்திரிக்கைகள் வெளியிடத்தடை கோரி நடிகை சுகன்யா தாக்கல் செய்த வழக்கில் அவர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தனதுதாயாருடன் ஆஜரானார்.

அவர் தனது மனுவில், இந்து மத திருமணச் சட்டம் 26வது பிரிவின்படி குடும்ப நல நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிபத்திரிக்கைகளில் செய்தி வெளியிடக் கூடாது என்றும், எனவே தனது வழக்கு தொடர்பான செய்திகளைவெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா துரைசாமி வரும் 2ம் தேதிக்கு (நாளை) தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil