»   »  டிரம்ப் ஆட்சியில் ஆஸ்கர் விழாவில் முஸ்லீம் நடிகர், கருப்பின நடிகை புதிய சாதனை

டிரம்ப் ஆட்சியில் ஆஸ்கர் விழாவில் முஸ்லீம் நடிகர், கருப்பின நடிகை புதிய சாதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: நடிப்புக்காக ஆஸ்கர், எமி, டோனி விருதுகளை வாங்கிய முதல் கருப்பின நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் வயோலா டேவிஸ்.

89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது ஃபென்சஸ் படத்திற்காக வயோலா டேவிஸுக்கு கிடைத்தது.

முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு டிவி தொடரான ஹவ் டூ கெட் அவே வித் மர்டருக்காக வயோலாவுக்கு எமி விருது கிடைத்தது. அதற்கும் முன்பு அவர் இரண்டு டோனி விருதுகளை வென்றுள்ளார்.

இன்று ஆஸ்கர் வென்றுள்ளார். இதன் மூலம் நடிப்புக்காக ஆஸ்கர், டோனி, எமி விருது பெற்ற முதல் கருப்பின நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் வயோலா.

Viola Davis wins Oscar, sets a new record

கருப்பின நடிகை ஊஃபி கோல்ட்பெர்க்கும் ஆஸ்கர், எமி, டோனி விருதுகளை வாங்கியுள்ளார். ஆனால் அவர் டோனி விருதை தயாரிப்பாளராக பெற்றாரே தவிர நடிப்புக்காக அல்ல.

English summary
Viola Davis has become the first black woman to win Oscar, Emmy and Tony awards for acting. She has achieved this feat by winning an oscar today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil