»   »  ஸ்டன்ட் நடிகர் சங்க கூட்டத்தில் பெரும் சண்டை!

ஸ்டன்ட் நடிகர் சங்க கூட்டத்தில் பெரும் சண்டை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

700 உறுப்பினர்களைக் கொண்ட ஸ்டன்ட் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் பெரும் சண்டை ஏற்பட்டது.

தமிழ் சினிமாவில் அதிரடி சண்டைக் காட்சிகளை வடிவமைக்கும் ஸ்டன்ட் இயக்குநர்கள், ஸ்டன்ட் காட்சிகளில் இடம்பெறும், ஹீரோக்களுக்கு டூப் போடும் நடிகர்கள் போன்றவர்களுக்கென உள்ள சங்கம் இது.

Violence outbursts at Stunt association meeting

இந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வடபழனியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில் ஸ்டண்ட் இயக்குனர்களும் ஸ்டண்ட் நடிகர்களும் கலந்து கொண்டனர்.

பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள் கனல் கண்ணன், ஜாகுவார் தங்கம், தளபதி தினேஷ், தியாகராஜன், சூப்பர் சுப்பராயன், அனல் அரசு, சந்திரசேகர், குன்றத்தூர் பாபு உள்பட பலர் பங்கேற்றனர். பொதுக்குழுவில் ஸ்டண்ட் நடிகர்களுக்கும் ஸ்டண்ட் இயக்குனர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கயிறுகட்டி சண்டை போடும் காட்சிகளில் நடிக்க தயாரிப்பாளர்களிடம் இருந்து தங்களுக்கு அதிக சம்பளம் வாங்கித்தர வேண்டும் என்று ஸ்டண்ட் நடிகர்கள் வலியுறுத்தினர்.

கனல் கண்ணன் சங்கத்தில் இல்லாதவர்களை வைத்து சண்டை காட்சி எடுத்ததாகவும் குற்றம் சாட்டினர். இதுபோல் ஸ்டண்ட் நடிகர் ஒருவர் தங்களுக்குத் தெரியாமல் சண்டைகாட்சியை படமாக்கியதாக ஸ்டண்ட் இயக்குனர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது திடீரென கூட்டத்தில் கலாட்டா, ரகளை ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் அடிக்கப் பாய்ந்தனர்.

இதனால் ஸ்டண்ட் இயக்குனர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறி போட்டிக்கூட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் சங்கத்தில் இருந்து விலகி தனி அமைப்பு தொடங்கி செயல்படப் போவதாக திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில்(பெப்சி) கடிதம் கொடுத்தனர்.

இதனால் ஸ்டண்ட் இயக்குனர் மற்றும் ஸ்டண்ட் நடிகர் சங்கம் உடையும் சூழல் உருவாகியுள்ளது.

English summary
Violence outbursts at the Stunt Masters and actors association general body meeting on Thursday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil