»   »  பொங்கலுக்கு மோதும் வி.ஐ.பி தனுஷ் – மெட்ராஸ் கார்த்தி

பொங்கலுக்கு மோதும் வி.ஐ.பி தனுஷ் – மெட்ராஸ் கார்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தை பொங்கல் திருநாளுக்காக புத்தம் புதிய திரைப்படங்களை களமிறக்கப் போகின்றன தொலைக்காட்சி சேனல்கள். வேலையில்லா பட்டதாரி, ஜிகர்தண்டா, மெட்ராஸ், வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட உள்ளதாக முதற்கட்ட முன்னோட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முறை தனுசும், கார்த்தியும் நேரடியாக மோதுகின்றனர்.

பண்டிகை விடுமுறை தினங்கள் வந்தாலே தியேட்டர்களில் புது திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது வாடிக்கையான நிகழ்வுதான். அதேபோல இப்போது சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு தியேட்டருக்கு வந்து சில மாதங்களே ஆன புதுப்படங்களை ஒளிபரப்புகின்றன.

இதனால் தியேட்டர் நெரிசலில் சிக்கி வதைபடுவதை விட வீட்டில் விளம்பரத்துக்கு நடுவே அவ்வப்போது சினிமாவைப் பார்த்து ஆறுதல் பட்டுக்கொள்கின்றனர் இல்லத்தரசிகள்.

தனுஷ் – அமலாபால்

தனுஷ் – அமலாபால்

சன் டிவியில் தனுஷ் - அமலாபால், சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் ஜனவரி 15ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் நான்கே மாதங்களில் டிவியில் ஒளிபரப்பாகிறது.

மெட்ராஸ்

மெட்ராஸ்

கார்த்தி, கேத்ரீன் தெரஸா நடித்துள்ள மெட்ராஸ் திரைப்படம் தை திருநாள் தினத்தன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. செப்டம்பர் மாத கடைசியில் ரிலீஸ் ஆன இந்த படம் மூன்றே மாதங்களில் டிவியில் ஒளிபரப்பாகிறது.

ஜிகர்தண்டா

ஜிகர்தண்டா

சித்தார்த், லட்சுமி மேனன் நடித்த ஜிகர்தண்டா திரைப்படத்தை ஸ்டார் விஜய் ஒளிபரப்புகிறது. இதுவும் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆன திரைப்படம்தான். ரிலீஸ் சமயத்திலேயே வேலையில்லா பட்டதாரியுடன் மோதி பின்னர் தாமதமாக ரிலீஸ் ஆனது. இப்போது டிவியில் பொங்கல் ரேஸில் குதித்துள்ளது. ஆனால் இது ஜனவரி 16ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சிகரம் தொடு

சிகரம் தொடு

விக்ரம் பிரபு, மோனல் கஜ்ஜார் நடித்த படமான சிகரம் தொடு திரைப்படம் ஜனவரி 15ஆம் தேதி காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

வானவராயன் வல்லவராயன்

வானவராயன் வல்லவராயன்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கழுகு கிருஷ்ணா, மாகாபா ஆனந்த் நடித்த வானவராயன் வல்லவராயன் ஒளிபரப்பாகிறது.

இன்னும் நிறைய இருக்கு

இன்னும் நிறைய இருக்கு

இது முன்னோட்டம்தான். கலைஞர், ராஜ், ஜெயா, பாலிமர், வேந்தர்,புதுயுகம் என பல சேனல்களிலும் இன்னும் நிறைய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. அந்த சினிமாக்களைப் பற்றி இன்னும் சில தினங்களில் தெரிந்து கொள்ளலாம்.

English summary
Pongal 2015 special movies telecasting in Tamil TV channels. Sun TV VIP, Star Vijay Madras and Jigarthanda, Zee Tamizh Vanavarayan and Vallavarayan
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil