’ரோஜா ரோஜா’ வைரல் சிங்கர் சத்யனுக்கு அடித்தது ஜாக்பாட்.. துருவ் விக்ரமின் ‘பைசன்’ படத்தில் செம வாய்ப்பு!

சென்னை: காதலர் தினம் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வாலி வரிகளில் உன்னி கிருஷ்ணன் பாடிய "ரோஜா ரோஜா" பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேடை நிகழ்ச்சி ஒன்றில் அந்த பாடலை பாடி வைரலான சிங்கர் சத்யனும் திரைத்துறையில் சில பாடல்களை பாடியுள்ளார். ஆனால், பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

சமீபத்தில், அவர் மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாடிய பழைய வீடியோ திடீரென டிரெண்டான நிலையில், சத்யன் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்தார். இந்நிலையில், அவருக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்தில் இடம்பெற்றுள்ள "தென்னாடு" பாடலை பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Viral Singer Sathyan gets a superb song chance in Dhruv Vikram s Bison out now
Photo Credit:

சத்யன் குரலில் உருவான தென்னாடு பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தீபாவளி போட்டியில் பைசன்: துருவ் விக்ரம் தனது அப்பா விக்ரம் பெயரை நீக்கிவிட்டு துருவ் என்றே மாரி செல்வராஜின் பைசன் படத்தில் நடித்துள்ளார். படத்தின் டைட்டில் மற்றும் அனைத்திலும் வெறும் துருவ் என்றே உள்ளது. ஆதித்யா வர்மா, மகான் படங்களை தொடர்ந்து துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. பிரதீப் ரங்கநாதனின் டியூட், எல்ஐகே, ஹரிஷ் கல்யாணின் டீசல் மற்றும் நட்டி நட்ராஜின் கம்பி கட்ன கதை உள்ளிட்ட படங்களுடன் பைசன் வெளியாகிறது.

Viral Singer Sathyan gets a superb song chance in Dhruv Vikram s Bison out now
Photo Credit:

கபடி படம்: சமீபத்தில், கபடியை மையமாக வைத்து பல்டி எனும் படம் வெளியானது. ஷேன் நிகாம், சாந்தனு, ப்ரீத்தி அஸ்ரானி, செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன் உள்ளிட்ட பலர் நடித்த அந்த பல்டி திரைப்படம் கபடி போட்டியை விட்டு விட்டு கிரைம் ஸ்டோரியாக மாறிய நிலையில், பாக்ஸ் ஆபீஸில் படுத்து விட்டது. இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி வீரர் மண்ணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறு படமாக பைசன் வெளியாக காத்திருக்கிறது. வாழை படத்துக்குப் பிறகு மாரி செல்வராஜின் பைசன் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வைரல் சிங்கர் சத்யன் பாடல்: "ரோஜா ரோஜா" பாடலை ஸ்டேஜில் பாடி மிகப்பெரிய ஈர்ப்பை கவர்ந்த வைரல் சிங்கர் சத்யன் எல்லாம் ஏன் பெரிய பாடகராக மாறவில்லை என ரசிகர்கள் அவரை சமீபத்தில் டிரெண்டாக்கிய நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்தின் தென்னாடு பாடலை பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. லிரிக் வீடியோவில் சத்யன் பாடுவதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையில், மாரி செல்வராஜ் வரிகளில் தென்னாடு பாடல் காதுகளுக்கும் கண்களுக்கும் இனிமையாக உள்ளது.

தூள் கிளப்பும் துருவ்: சியான் விக்ரமின் மகன் துருவ் இதுவரை நடித்த படங்கள் ஏதும் பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த ஆண்டு தீபாவளிக்கு கண்டிப்பாக துருவ் தூள் கிளப்புவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மரத்தின் கிளையை பிடித்துக் கொண்டு துருவ் புல் அப்ஸ் எடுப்பது, சைக்கிள் ஓட்டி செல்வது, பசுபதி சொல்லிக் கொடுக்க ஏர் பூட்டி வயலில் வேலை பார்க்கும் காட்சிகள் எல்லாம் கலக்கலாக உள்ளன.

மலையாள நடிகைகள்: கர்ணன் படத்தில் நடித்த ரஜிஷா விஜயன் மீண்டும் பைசன் படத்தில் நடித்துள்ளார். மேலும், அனுபமா பரமேஸ்வரனும் இந்த படத்தில் நடித்துள்ளார். இருவரும் அக்கா தங்கையாக நடித்துள்ளார்கள் என்றே தெரிகிறது. இருவரும் வீட்டில் தண்ணீர் ஊற்றி விளையாடும் காட்சிகள், சேற்றில் விழுந்து புரண்டு மீண்டு பிடிக்கும் காட்சி, நத்தை சமைக்கும் காட்சி என பாடல் முழுக்க ஏகப்பட்ட அருமையான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X