விருமன் முதல் காட்சி, முதல் ஆளாக பார்த்த விஜய்யின் மனைவி சங்கீதா.. கார்த்தி ஹேப்பி அண்ணாச்சி

சென்னை: கார்த்தி நடித்துள்ள 'விருமன்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

முத்தையா இயக்கியுள்ள 'விருமன்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.

'விருமன்' படத்தை தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா முதல் ஆளாக சென்று பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் கொண்டாடும் விருமன்

ரசிகர்கள் கொண்டாடும் விருமன்

பருத்தி வீரனில் அறிமுகமான கார்த்திக்கு, கிராமத்துப் பின்னணி கொண்ட படங்களில் நடிப்பதைப் பற்றி கேக்கவே வேண்டாம். ஏற்கனவே இயக்குநர் முத்தையாவுடன் 'கொம்பன்' படத்தை ஹிட் கொடுத்த கார்த்தி, இப்போது 'விருமன்' படத்தையும் மாஸ் ஹிட்டாக்கியுள்ளார். இன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை, கார்த்தியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதிதி சங்கருக்கு அமர்க்களமான அறிமுகம்

அதிதி சங்கருக்கு அமர்க்களமான அறிமுகம்

தமிழ் சினிமாவின் பிரமாண்டமான இயக்குநர் என பெயர் வாங்கிய சங்கரின் மகள் அதிதி, 'விருமன்' படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். முதல் படத்திலேயே கார்த்திக்கு ஜோடி, சூர்யாவின் தயாரிப்பு, யுவனின் இசை என அமர்க்களமான வரவேற்பு அதிதிக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து அதிதி சங்கருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

விருமன் படத்துக்கு பிரபலங்கள் பாராட்டு

விருமன் படத்துக்கு பிரபலங்கள் பாராட்டு

கார்த்தி அதிதி சங்கர், யுவன் சங்கர் ராஜா, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரன், சூரி, இயக்குநர் முத்தையா என பிரம்மாண்டக் கூட்டணியுடன் உருவாகியுள்ள 'விருமன்' படம் வெற்றி பெற பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர்கள், பாண்டிராஜ் வெங்கட் பிரபு, நடிகர் கெளதம் கார்த்தி உள்ளிட்ட பலரும் 'விருமன்' படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.

விஜய் மனைவி சங்கீதா

விஜய் மனைவி சங்கீதா

கார்த்தியின் விருமன் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து, பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். விருமன் முதல் காட்சியான FDFS-ஐ பார்க்க, தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா முதல் ஆளாக சென்றுள்ளார். இதனைப் பார்த்த விஜய், கார்த்தி ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருவதைப் பார்த்த நடிகர் கார்த்தியும், ஹேப்பி மூடில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

லோகியின் யுனிவர்சில் இணைவார்களா?

லோகியின் யுனிவர்சில் இணைவார்களா?

லோகேஷ் கனரகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் கமிட் ஆகியுள்ளார். விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அப்டேட்கள் வெளிவர உள்ளன. அதேநேரம் விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து, புதிதாக 'லோகி யுனிவர்ஸ்' என்ற கான்செப்ட்டை, லோகேஷ் உருவாக்கியுள்ளார். அதனால், விஜய் 67 படத்தில், கைதியின் கார்த்தியும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X