»   »  வோக் பியூட்டி விருது விழாவில் கைகோர்த்து அசத்தலாக வந்த கோஹ்லி, அனுஷ்கா

வோக் பியூட்டி விருது விழாவில் கைகோர்த்து அசத்தலாக வந்த கோஹ்லி, அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் நடந்த வோக் பியூட்டி விருதுகள் விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது நடிகை அனுஷ்கா சர்மாவும், அவரது காதலர் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் தான்.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை காதலிக்கிறார் என்பது ஊர், உலகம் அறிந்த செய்தி. இருவரும் கைகோர்த்து ஊர் சுற்றுவது, வெளிநாடுகளுக்கு செல்வதுமாக உள்ளனர்.

காதல் என்ற வார்த்தையை மட்டும் அனுஷ்கா இதுவரை கூறவில்லை.

அனுஷ்கா

அனுஷ்கா

கோஹ்லியை காதலிக்கிறீர்களா என்பது தான் அனுஷ்கா சர்மாவுக்கு பிடிக்காத கேள்வியாக உள்ளது. அந்த கேள்வியை யார் கேட்டாலும் அவரிடம் இருந்து பதில் மட்டும் வராது.

கோஹ்லி

கோஹ்லி

கோஹ்லி அனுஷ்கா சர்மாவை காதலிப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். அவர்களின் காதல் திருமணம் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விருது விழா

விருது விழா

கடந்த 21ம் தேதி மும்பையில் வோக் பியூட்டி விருதுகள் விழா நடைபெற்றது. விழாவில் ராணி முகர்ஜி, அனுஷ்கா சர்மா, மதுபாலா உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

ஜோடி

ஜோடி

விழாவுக்கு அனுஷ்கா சர்மா அழகிய வெள்ளை நிற கவுன் அணிந்து வந்திருந்தார். அவருடன் கைகோர்த்து வந்த கோஹ்லி கருப்பு நிற கோட் சூட் அணிந்திருந்தார். விழாவுக்கு வந்தவர்களின் கவனம் எல்லாம் அவர்கள் மீது தான் இருந்தது.

English summary
Cricketer Virat Kohli and his girlfriend actress Anushka Sharma have got the attention of all in the Vogue beauty awards function held in Mumbai on july 21st.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil